Header Ads



மனித உடலில் காணப்படும் மிகப் பெரும் தெய்வீக அத்தாட்சி

 
மனித உடலில் காணப்படும் மிகப் பெரும் தெய்வீக அத்தாட்சிகளில் ஒன்றுதான்  "டி என் ஏ" கைரேகைகளாகும். பூமியில் வாழ்ந்து மறைந்த, தற்போது வாழ்கின்ற மனிதர்களிள் எந்த ஒரு மனிதனது கைரேகையும் மற்றொரு மனிதரின்  கைரேகைக்கு ஒப்பானதாக இருக்கவே இருக்காது. 


ஒரு திறமையான ஓவியர் வைத்து வித்தியாசம் வித்தியாசமான கைரேகை வடிவங்களை வரையும்படி வேண்டப்பட்டால் சுமார்  20 க்கு‌ மேலான கைரேகைகளை அவரால் வரைய முடியாமல் போகும். 


காரணம், மனித கைரேகைகளின் வடிவமைப்பானது ஆக்கபூர்வமாகவும், அபூர்வமாகவும் வடிமைக்கப்பட்ட மிகவும் சிக்கல் மிக்க வலையமைப்புக்கள் என்பதாகும். மேலும் ஆற்றல் மிக்க அந்த படைப்பாளன் ஆக்கியது போன்று எந்த ஒரு ஓவியராலும் போட்டிபோட்டு அது போன்று ஆக்க முடியாது என்பதாகும். 


மனிதர்களாகிய நாம் எவ்வளவு பலவீனமான படைப்பினம் என்றால் நம் உடம்பில் இந்த சின்னஞ்சிறிய தெய்வீக அத்தாட்சி உள்ளது. அதுகூட நம்மால் கற்பனை செய்வது கூட பார்க்க முடியாத மிகவும் சிக்கலான மரபணு குறியீடுகளாகும். 


((உங்களுக்குள்ளும் (பல சான்றுகள்) உள்ளன. சிந்திக்க மாட்டீர்களா?))


📖 அல்குர்ஆன் / 51 - 21


✍ தமிழாக்கம் / Imran Farook

No comments

Powered by Blogger.