Header Ads



பனிஸ் வாங்கச் சென்ற சிறுமி உயிரிழப்பு


முல்லைத்தீவு, கருநாட்டுக்கேணி பகுதியில் இன்று (21) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 9 வயது பாடசாலை மாணவி ஒருவர் உயிரிந்துள்ளார். 


பேக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் நடமாடும் முச்சக்கர வாகனத்தில் பனிஸ் வாங்க சென்ற சந்தர்ப்பத்தில் சிறிய ரக லொறியில் மோதி குறித்த சிறுமி விபத்துக்குள்ளானதாக முல்லைத்தீவு கொக்கிளாய் பொலிஸார் தெரிவித்தனர். 


விபத்தில் காயமடைந்த சிறுமி முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 


சம்பவத்தில் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சந்தேக நபரான லொறியின் சாரதி ஏற்கனவே ஒருவர் இறப்பதற்குக் காரணமான குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர் என பிரதேச மக்கள் தெரிவித்தனர். 


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கிளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.