Header Ads



3 ஆக உடைந்துள்ள பொதுஜன பெரமுன - பசில் மீண்டும் பாராளுமன்றம் வருவாரா..?


மொட்டுக்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்க்கட்சிக்கு செல்லத் தயாராக உள்ளதாக நாடாளுமன்றில் வைத்துத் தெரிவித்துள்ளனர்.


சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.


ஆகவே ​​பொசன் போயாவிற்கு முன்னர் இந்த வெளியேற்றம் இடம்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 


சிறிலங்கா பொதுஜன பெரமுன தற்போது மூன்றாக பிளவுபட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் குழுவும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் குழுவும் அதில் பிரதானமாக உள்ளதாகவும், மற்றைய குழு அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் பயணிப்பது பொருத்தமானது என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை, பசில் ராஜபக்ச தேசியப்பட்டியலில் இருந்து மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


எவ்வாறாயினும் மொட்டுக்கட்சியினர் சிலர் எதிர்க்கட்சிக்கு செல்லும் திட்டம் உள்ளதாகவும் உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன என்பதும் குறிப்பிடதத்க்கது.

No comments

Powered by Blogger.