ஸ்பெயினிலிருந்து குதிரைகளில் இம்முறை ஹஜ்ஜுக்கு சென்றுள்ள குழு
அண்டலூசிய முஸ்லிம்கள் 500 ஆண்டுகளுக்குமுன், எப்படி ஹஜ்ஜுக்கு சென்றார்களோ, அதுபோன்று சவுதி அரேபியா மக்காவிற்கு ஸ்பெயினிலிருந்து ஒரு சிறிய குழு ஹஜ்ஜுக்கு குதிரையில் பயணம் செய்துள்ளது.
அப்துல் காதர், தாரிக், அப்துல்லா ஆகிய 3 பேரே 025 ஹஜ்ஜுக்கு கிட்டத்தட்ட 7 மாதங்களில் 6,500 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டு மக்காவை சென்றடைந்துள்ளனர்.
ஆரம்பத்தில் முகமது மிஸ்பாஹி அவர்களுடன் இணைந்தார், ஆனால் ஒரு கால்நடை மருத்துவர் 2 குதிரைகளை ஓய்வு அப்புறப்படுத்துமாறு அறிவுறுத்தியதையடுத்து, அவர் தனது பயணத்தை இடைநடுவில் முடிக்க வேண்டியிருந்தது.
இது ஒரு கனவு, அது நிஜமாகிவிட்டது என்று ஸ்பெயின், மொராக்கோ இரட்டை குடியுரிமைகளையுடைய ஏற்பாட்டாளர்களில் ஒருவரான தே நேஷனலிடம் கூறினார்.
ஸ்பெயின் முஸ்லிம் சமூகத்தினரிடமிருந்து எங்களுக்கு மிகவும் அன்பான பிரியா விடை கிடைத்தது என்று அவர் சவுதி அரேபியாவிலிருந்து கூறினார்.
குதிரை வீரர்கள் சகிப்புத்தன்மைக்கு பெயர் பெற்ற குசெஸ்தானி வம்சாவளியைச் சேர்ந்த குதிரைகளுடன் 4 ஆண்டுகள் பயிற்சி பெற்றனர்.
அந்தக் குதிரைகள் மிகவும் எதிர்ப்புத் திறன் கொண்ட, மிகவும் கண்டிப்பானவை. மிகவும் வலிமையானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment