Header Ads



இலங்கைச் சிறுவர்களை கடத்தும் கும்பல்


மலேசியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கை சிறுவர்களை ஐரோப்பாவிற்குக் கடத்தும் கும்பல் ஒன்றை மலேசிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.


மலேசியாவின் குடிவரவுத் திணைக்களம் நேற்றைய தினம் (19.04.2023) கோலாலம்பூரில் உள்ளூர் தம்பதியரைக் கைது செய்ததன் மூலம் இந்த விடயம் வெளியாகியுள்ளது. 


 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களைக் கொண்ட ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மலேசியப் பெற்றோரைப் பயன்படுத்தி இந்த செயற்பாட்டை மேற்கொண்டு வந்துள்ளது.


குறித்த நிறுவனம், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்களை தங்கள் பிள்ளைகளுக்கான மலேசியக் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதைப் போன்று குடியேற்ற அலுவலகத்திற்கு அவர்களின் பிறப்புச் சான்றிதழைக் கொண்டு வரும்படி கூறப்பட்டுள்ளனர்.


எனினும், குடிவரவு பிரிவில் விண்ணப்பிக்கும் செயல்முறையின் போது, கைரேகைகள் மற்றும் புகைப்படங்களைப் பெறுவதற்காக, அவர்களுடைய பிள்ளைகளின் வயதை நெருங்கும் இலங்கை சிறுவர்களை அந்த பெற்றோர் அழைத்து வருவார்கள்.


இதன்போது, குறித்த கணவனும் மனைவியும் இலங்கை சிறுவர்களை மலேசியக் கடவுச்சீட்டு மூலம் ஐரோப்பாவிற்கு அழைத்துச் செல்வதன் மூலம் அவர்களுடன் ஐரோப்பாவுக்குச் செல்லும் வகையில் அங்குச் செயற்படுவார்கள்.


சம்பந்தப்பட்ட இலங்கைப் பிள்ளைகளுக்குப் பயன்படுத்துவதற்காக அலுவலகத்தில் தமது பிள்ளையின் ஆவணங்களுடன் வருகை தருவதற்கு மலேசிய பெற்றோருக்கு 500 ரிங்கிட் வரை கொடுக்கப்பட்டதாக மலேசியத் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், மலேசியக் கடவுச்சீட்டு செய்து ஐரோப்பாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒவ்வொரு இலங்கை சிறுவர்களுக்கும் குறித்த மோசடி நிறுவனம், 30,000 யூரோ முதல் 50,000 யூரோ வரை ஊதியம் பெற்றதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


எனினும், எவ்வளவு காலம் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது மற்றும் எத்தனை சிறுவர்கள் இதில் இதுவரை ஈடுபட்டுள்ளனர் என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.



இந்தநிலையில், இலங்கை சிறுவர் ஒன்றுக்கு மலேசியக் கடவுச்சீட்டைப் பெறுவதற்காக ஒரு தம்பதியினர் கோலாலம்பூர் குடிவரவுத் திணைக்களத்திற்குச் சென்றபோது இந்த மோசடி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.


குழந்தைக்கு மலாய் மொழி பேசத் தெரியாத நிலையில், பாதுகாவலரின் தோற்றத்தில் கணிசமான வித்தியாசம் இருந்ததால், சிறுவரை நேர்காணல் செய்யும்போது ஏதோ குளறுபடி இருப்பதைக் கவனித்த கடவுச்சீட்டுப் பிரிவின் குடிவரவு அதிகாரிகள் தம்பதியினரைக் கைது செய்துள்ளனர். 


கைது செய்யப்பட்டவர்கள் 37 மற்றும் 26 வயதுடைய தம்பதி எனக் குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.