கணவனால் கழுத்து வெட்டப்பட்டு, கொலை செய்யப்பட்ட ஆசிரியையின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு
வவுனியாவில் கணவனால் கழுத்து வெட்டப்பட்டு, கொலை செய்யப்பட்ட ஆசிரியையான, சுவர்ண லதாவின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆம் திகதி தனது கணவரால் இவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
பொலித்தீன் பையினுள் தனது மனைவியின் தலை இருப்பதாகவும், அவரை கொலைசெய்து காட்டுப்பகுதியில் எறிந்துள்ளதாகவும் பொலிஸில் சரணடைந்த கணவரான சந்தேக நபர் குறிப்பிட்டதையடுத்து, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் உடல் சின்னப்பூவரசங்குளத்திற்கு அருகில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.
Post a Comment