Header Ads



சவூதி அரேபியாவுடனான உறவை, மேம்படுத்துவதற்கு இலங்கை முயற்சி - அலி சப்ரி


முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவை ஊடாக சவூதி அரேபியாவுடனான உறவை மேம்படுத்துவதற்கு இலங்கை முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார் . 


சவூதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் அலி சப்ரி , அராப் நியூஸூக்கு வழங்கிய விசேட செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார் . 


நேற்றைய தினம் சவூதி அரேபியா நோக்கி பயணித்த அவர் , எதிர்வரும் 27 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் . 


இதன்போது அவர் , சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார் . இந்தநிலையில் வேலை வாய்ப்புகள் மற்றும் முதலீட்டை பெறுவதற்கான தற்போதைய கலந்துரையாடல்களை மேலும் வலுப்படுத்துவதற்காகவே தாம் சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார் . 


பாரம்பரியமாக இலங்கை சவுதி அரேபியாவுடன் நல்ல உறவை கொண்டுள்ளது . எனவே அதை வலுப்படுத்த முடியும் என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்

3 comments:

  1. எமது நாட்டில் வேலையில்லாமல் ஒரு கூட்டம் அலைந்துகொண்டிருக்கின்றது. அத்தனை பேருக்கும் தொழில் கொடுப்பதன் மூலம் எங்கள் பிச்சைப்பாத்திரத்துக்கு அதிகமதிகமாகப் போடுவதன் மூலம் எங்கள் மீதுள்ள உங்கள் உறவை மேலும் வலுப்படுத்துவது தான் எனது விஜயத்தின் பிரதான நோக்கம். எங்கள் ஊரிலும் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. சவூதியில் உள்ள வெற்றிடங்களை நிரப்பும் போது சவூதி பிறந்தவர்களுக்குத்தான் நாம் முதலிடம் கொடுக்குமாறு எமது அமைச்சரவை தீர்மானித்திருக்கின்றது என இன்னும் அலிசப்ரியிடம் இந்த பத்திரிகையாளர் கூறவில்லை. அப்படிக் கூறினால் மெதுவாக எழும்பி ஏனைய எல்லா மந்தி(ரி)கள் மாதிரி கிடைக்கும் இலவச கோப்பியைக் குடித்துவிட்டு பின்கதவால் வௌியேறிவிடுவது தான் நல்லது என மெதுவாக மறைந்துவிட வேண்டும். அவ்வளவு தான் இங்கு வௌிநாட்டு அமைச்சரின் சவூதி அரேபியா விஜயம் வெற்றி, இலங்கை அனைவருக்கும் தொழில் வழங்க சவூதி தயாராக இருக்கின்றது என பத்திரிகைகளுக்கு வழமைபோல் விலாசித் தள்ளவேண்டியதான். ஒரு கோடி அல்லது அதைவிட சற்று குறைவான பொதுமக்களின் பணம் நாசம். காரியம் எல்லாம் வழமைபோல் வெற்றிகரமாக முடிந்துவிட்டது.அரசாங்கத்துக்கும் சனாதிபதிக்கும் வௌிநாட்டு அமைச்சருக்கும் ஜயவே வா!

    ReplyDelete
  2. "பாரம்பரியமாக இலங்கை சவுதி அரேபியாவுடன் நல்ல உறவை கொண்டுள்ளது ."

    True. But your Govt. has ruined it beyond repair by the anti Muslim actions your Govt, carried out from the time your Govt. came to power. No Muslim country will forgive you for cremating more than 250 Muslim victims of covid-19 on TOTALLY BASELESS grounds and DISREGARDING the Appeals from several Muslim countries.

    You were the Minister of Justice then. But, you could do NOTHING to do Justice to the Muslims. Wonder, how you will face Allah (Swt) when the time comes.

    And now, you have gone with the Begging bowl to Saudi Arabia. You are sure to get a belly-full from the Saudis.

    ReplyDelete
  3. This is totally true when it comes to the reality of politics, Sabri thought of expanding his professional job by attaching to the politics, but in reality it this crook and cheap politics has damaged his profession and this will be realised very soon when no clients turn to his services in the coming years. As his coat and shoots will not serve any purpose when it come to the reality. He knows a bit of Saudi Arabia and its culture, when it comes to the anti-religious and anti - Muslims campaign orchestrated under useless Gota, Sabri gave all out support to this idiot to ruin and destroy the Muslim Identity plus their inner feelings by forcefully cremating the Janazas of Muslims. This crime is forcefully implemented to torture and subjugate the feelings of Muslims which is known to every Muslim in the world. This has already done with the indirect support of Ali Sabri, which could not be eradicated or erased worldwide under any circumstances. It is better that Ali Sabri does not visit Muslim dominated country at least protect his coat and shoot.

    ReplyDelete

Powered by Blogger.