Header Ads



"உங்களின் ஆதரவு, எங்களுக்கு வேண்டாம்”

அமைச்சர் வசந்த சேனநாயக்கவை மீண்டும் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துக்கொள்ளப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

வசந்த சேனநாயக்க இல்லாமல் எங்களிடம், மைத்திரி - மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் நாம் ஒரு உறுப்பினரை இழந்து விட்டோம் என நினைத்துக்கொண்டிருப்பது கற்பனையாகும்.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொள்வதற்கு வசந்த சேனநாயக்க முயற்சிக்க வேண்டாம். உங்களின் ஆதரவு எங்களுக்கு வேண்டாம்” என அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர், ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வசந்த சேனநாயக்க மைத்திரி - மகிந்த தரப்புக்கு ஆதரவு தெரிவித்தார்.

அத்துடன், அமைச்சு பதவியொன்றையும் பெற்றுக்கொண்டார். எனினும், மைத்திரி - மகிந்த தரப்பினருக்கு போதிய பெரும்பான்மை இல்லையென கூறி மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கப்போவதாக கடந்த வாரம் வசந்த சேனநாயக்க அறிவித்திருந்தார்.

எனினும், நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வசந்த சேனநாயக்க கலந்துகொண்டிருந்தார். இந்நிலையிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.