Header Ads



கண்டியில் பெண்களை நிர்வாண படமெடுத்த வைத்தியசாலை,நிக்கவரெட்டியவில் 682 கர்ப்பிணிகளுக்கு என்ன நடந்தது..?

கண்டி வைத்தியசாலை ஒன்றில் பரிசோதனை செய்ய வந்த பெண்ணொருவரை ஆபாசமாக புகைப்படம் எடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 46 வயதுடைய தாய் ஒருவர் ஸ்கேன் பரிசோதனை செய்துக் கொள்வதற்காக கண்டி நகரத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

இதன்போது ஸ்கேன் அறையினுள், சிறிய துணியில் அவரது கண்களை கட்டி கையடக்க தொலைப்பேசியில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்த கதிரியக்க நிபுணர் ஒருவர் கண்டி, குழந்தை மற்றும் பெண்கள் பொலிஸ் பணியகத்தினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்களை கட்டிய சிறிது நேரத்தின் பின்னர் சந்தேகமடைந்த குறித்த பெண் கண்ணில் இருந்து துணியை நீக்கிய போது சம்பவம் உறுதியாகியுள்ள நிலையில் இவ்வாறு புகைப்படம் எடுத்த கதிரியக்க நிபுணர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

குறித்த நபரை பிடிக்க முயற்சித்த போது காயமடைந்த இந்த பெண் சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அந்த நபரை கைது செய்து கையடக்க தொலைப்பேசியை சோதனையிட்ட போது அந்த பெண்ணின் நிர்வாண புகைப்படம் மற்றும் வீடியோ அதில் இருந்தமை உறுதியாகியுள்ளது.

இதற்கு மேலதிமாக மேலும் பல வீடியோ மற்றும் புகைபடங்கள் அந்த தொலைப்பேசி காணப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டி பிரதான நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 6ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2

கடந்த ஐந்து மாதங்களில் நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் 682 கர்ப்பிணி தாய்மார்களுக்கு என்ன நடந்ததென தகவல் இல்லை என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரை குழந்தை பெறுவதற்காக நிக்கவரெட்டிய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2483 தாய்மார்களில் 682 பேருக்கு என்ன நடந்ததென தகவல் இல்லை.

1796 தாய்மார்கள் மாத்திரமே குழந்தை பெற்றுள்ளனர். அவர்களின் 5 பேர் வேறு வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏனைய கர்ப்பிணி தாய்மார்கள் தொடர்பில் தகவல் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

2016 - 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டத்திற்கமைய குடிமகன் ஒருவரினால் வினவிய சந்தர்ப்பத்தில், குறித்த வைத்திய ஆவணம், வைத்திய அதிகாரியின் கையொப்பத்துடன் அவரிடம் வெளியிடப்பட்டுள்ளது. குழந்தைகள் பெற்ற பெண்களுக்குள் இறந்த நிலையில் 10 குழந்தைகள் கிடைத்துள்ளன. இரண்டு குழந்தை இறப்புகளும் இடம்பெற்றுள்ளன.

குழந்தைகள் பெற்ற தாய்மார்களில் இணையாத 682 கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெறாமல் வீட்டிற்கு சென்றார்களா, அப்படி இல்லை என்றால் அவர்களுக்கு நடந்தது என்ன?, சட்டமூல தகவல்கள் வழங்கும் போது நிக்கவரெட்டிய வைத்தியசாலையின் கவனயீனம் இதன் ஊடாக தெளிவாகியுள்ளது.

அத்துடன் இறந்த நிலையில் கிடைத்த 10 குழந்தைகள் மற்றும் இரண்டு குழந்தை இறப்பு இடம்பெற்றுள்ள நிலையில், இது தொடர்பில் உரிய விசாரணைகள் ஒன்றும் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் மருத்துவர்களிடம் மேற்கொள்ளப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இதேவேளை, விசேட வைத்தியர்கள் இருவர் தங்கள் தனிப்பட்ட ஆதரவில் வருகைத்தந்த நோயாளிகளுக்கு மாத்திரம் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

2 comments:

  1. வைத்திய மாபியாக்கள் என்பவர்கள் பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள் .

    ReplyDelete
  2. They will fight only against SAITM

    ReplyDelete

Powered by Blogger.