Header Ads



புத்தளத்தில் நடுவீதியில், மோதலில் ஈடுபட்ட 2 அரசியல்வாதிகள் (வீடியோ)

புத்தளம் மாவட்டம் ஆனமடுவ கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தல் இன்று (30) நடைபெற்ற போது கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார ஆகியோருக்கு இடையில் ஏற்படவிருந்த மோதலை அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் தலையீட்டு நிறுத்தியுள்ளனர்.

ஆனமடுவ கூட்டுறவு சங்கத்திற்கான 92 புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் 22 பிரதேசங்களை அடிப்படையாக கொண்டு நடைபெற்றது.

தேர்தல் மோசடியான முறையில் நடைபெறுவதாகவும் பல உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு இல்லாமல் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி, ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, தேர்தலுக்கு பொறுப்பாக இருந்த கூட்டுறவு பரிசோதகரான அதிகாரி மீது குற்றம் சுமத்தினார்.

அப்போது அந்த இடத்திற்கு வந்த சனத் நிஷாந்த எதனையோ கூற முயற்சித்த போது இருவருக்கும் இடையில் சூடான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் இரண்டு தரப்பிலும் 200க்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.