Header Ads



சுவிட்சர்லாந்து அரசாங்கத்திற்கு, 12 கோடி செலவு வைத்த கொலையாளி

சுவிட்சர்லாந்து நாட்டில் 4 பேரை கொலை செய்த கொலையாளி ஒருவர் அரசாங்கத்திற்கு ரூ.12 கோடி செலவு வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Ruppersil என்ற கிராமத்தில் நிகழ்ந்த கொலை சுவிஸ் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 48 வயதான தாயார், இவருடைய இரண்டு மகன்கள், மூத்த மகனின் காதலி என நான்கு பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

இந்த நான்கு பேரின் கொலைக்கு காரணமான கொலையாளியை பிடிக்க பொலிசார் தீவிர விசாரணையை நடத்தியுள்ளனர்.

ஆனால், கொலையாளியை பிடிக்க முடியவில்லை. பின்னர், பொலிசார் ஒரு அதிரடி திட்டத்தை வகுத்துள்ளனர். கொலை நடந்த கிராமத்தில் வசித்தவர்கள் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் வசித்த சுமார் 30,000 நபர்களின் செல்போன் தகவல்களை பெற்று அதன் மூலம் கொலையாளியை கண்டுபிடிக்க பொலிசார் திட்டமிட்டனர்.

இதனை செயல்படுத்துவற்காக தனியார் தொலைதொடர்பு நிறுவனத்திடம் இப்பணியை ஒப்படைத்துள்ளனர். தகவல் சேகரித்த பின்னர் கடந்தாண்டு மே மாதம் கொலையாளி அதிரடியாக கைது செய்யப்பட்டான்.

இந்நிலையில், பொலிசார் வழங்கிய பணியை செய்து முடித்தக் காரணத்திற்காக தொலைதொடர்பு நிறுவனம் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என ரசீதை அனுப்பியுள்ளது.

அதில், 800,000 பிராங்க் (12,26,70,457 இலங்கை ரூபாய்) கட்டணமாக செலுத்த வேண்டும் என நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளதை கண்டு ஆர்கவ் மாகாண அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

சுவிஸ் நாட்டிலேயே விசாரணை செலவிற்காக இவ்வளவு தொகை செலவிடப்பட்டது கிடையாது. தகவல் தொலைதொடர்பு நிறுவனம் கோரியுள்ள தொகையை செலுத்த மறுப்பு தெரிவித்துள்ள ஆர்கவ் மாகாண அரசு இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.