Header Ads



லண்டனில் பயங்கரவாதிகளைத் தேடி, மிகப்பெரும் தேடுதல் வேட்டை - பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு


லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று புதனன்று நடந்த தாக்குதலில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக மாநகர காவல்துறை துணை ஆணையாளர் மார்க் ரௌலி அறிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை செய்தவரும் அவரால் தாக்கப்பட்ட காவல்துறை அதிகாரியும் இதில் அடங்குவர். இதையொட்டி மிகப்பெரும் தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளன.

குறைந்தது இருபது பேர் இதில் காயமடைந்துள்ளனர். அதில் சிலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லண்டன் மாநகர வீதிகளில் பாதுகாப்புக்காக கூடுதல் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

லண்டனிலுள்ள பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தை "இப்போதைக்கு பயங்கரவாத தாக்குதலாக" கருதுவதாக லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

1 comment:

  1. Terrorists must be obliterated from the face of earth. They are the real menace to the public.

    ReplyDelete

Powered by Blogger.