Header Ads



பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு, பொலிஸாரினால் நேர்ந்த கதி

தனது அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்தத் தவ­றிய கொழும்பு பிர­தே­சத்தின் பொலிஸ் நிலையம் ஒன்றின் போக்­கு­வ­ரத்து பிரிவு பொறுப்­ப­தி­காரி ஒரு­வரை சுமார் 12 மணி நேரம் பம்­ப­லப்­பிட்டி பொலிஸ் நிலைய சிறைக் கூண்டில் அடைத்து வைத்த சம்­பவம் ஒன்று  இடம்­பெற்­றுள்­ளது.

இந்த சம்­பவம் குறித்து அறிய முடி­வ­தா­வது, கடந்த திங்­க­ளன்று இரவு பம்­ப­ல­பிட்டி பொலிஸ் நிலை­யத்­துக்கு உட்­பட்ட பொலிஸ்­கு­ழு­வொன்று ரோந்துப் பணியில் ஈடு­பட்­டுள்­ளது.

சார்ஜன்ட் ஒரு­வரின் தலை­மையில் ரோந்து சென்ற இந்த குழு பிர­பல ஹோட்டல் ஒன்றின் அருகே நபர் ஒருவர் நிற்­பதை அவ­தா­னித்­துள்­ளனர்.

அவரில் சந்­தே­க­ம­டைந்­துள்ள பொலிஸார் அவ­ரிடம் விசா­ரணை செய்­துள்­ளனர். இதன்போது அவர் தான் நிக்­க­வ­ரட்­டிய பகு­தியைச் சேர்ந்­தவர் என தெரி­வித்­துள்ளார்.

எனினும் அதனை உறு­திப்­ப­டுத்­தவோ அவ­ரது பதவி நிலை அல்­லது தொழில் குறித்தோ எத­னையும் வெளிப்­ப­டுத்­த­வில்லை.

இந்நிலையில் அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்த அவர் தவ­றி­ய­தாகக் கூறி பொலிஸார் அவரைக் கைது செய்­தனர்.

அதன் பின்னர் மேலும் இரு­வ­ரையும் அவர்கள் அந்த ரோந்தின் போது கைது செய்­துள்­ள­துடன், அதி­காலை 4.00 மணி­ய­ளவில் அவர்­களை பம்­ப­லப்­பிட்டி பொலிஸ் நிலையம் கொண்டு சென்று பொலிஸ் கூண்டில் அடைத்து வைத்­துள்­ளனர்.

இந்­நி­லையில் செவ்­வா­யன்று கொழும்பு பிராந்­திய போக்­கு­வ­ரத்து பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­க­ளுக்­கான சந்­திப்பு இடம்­பெற்­றுள்­ளது. இதன்­போது குறித்த பொலிஸ் பரி­சோ­தகர் மட்டும் பங்­கேற்­க­வில்லை.  

இத­னை­ய­டுத்து அவர் கட­மைக்கும் சமு­க­ம­ளிக்­கா­மையை அடிப்­ப­டை­யாகக்கொன்டு அவரை பொலிஸார் தேட ஆரம்­பித்­துள்­ளனர். அவ­ரது தொலை­பேசி உள்­ளிட்­டவை அவ­ரது உத்­தி­யோ­க­பூர்வ அறை­யி­லேயே இருந்தநிலையில் பொலிஸ் போக்­கு­வ­ரத்து பொறுப்­ப­தி­கா­ரியை தேடி விசா­ரணை இடம்­பெற்­றுள்­ளன.

இதன்போதே பம்­ப­ல­பிட்டி பொலிஸ் நிலை­யத்தில் கட­மை­யாற்றும் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் பொலிஸ் கூண்டில் உள்ள குறித்த பொலிஸ் பரி­சோ­த­கரை அடை­யாளம் கண்டு உட­ன­டி­யாக விட­யத்தை தெரி­யப்­ப­டுத்தி கூண்­டி­லி­ருந்து அவரை விடு­வித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து அவர் பொலிஸ் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார். எவ்­வா­றா­யினும் தான் ஒரு பொலிஸ் போக்­கு­வ­ரத்து பொறுப்­ப­தி­காரி என்றோ அல்­லது பொலிஸ் பரி­சோ­தகர் என்றோ கைதாகும்போது ஏன் அவர் கூற­வில்லை என்­பது சந்­தே­கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பாலித்த பனாமல் தெனிய ஆகியோரின் மேற்பார்வையின்  கீழ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

(எம்.எப்.எம்.பஸீர்)

No comments

Powered by Blogger.