Header Ads



யூடியுப்பை பார்த்து, கஞ்சா பயன்படுத்த பயிற்சி எடுத்த இளைஞன் கைது

இணைய வீடியோ தளமான யூடியுப்பை பார்த்து கஞ்சா பயன்படுத்துவதற்கு பயிற்சி எடுத்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் 920 மில்லி கிராம் கஞ்சாவுடன் கண்டி பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.

கட்டுகஸ்தொட்டை, மடவல வீதியில் வசிக்கும் இந்த இளைஞர் கண்டி தெய்யான்னேவெல பிரதேசத்தின் ரயில் வீதிக்கு அருகில் மறைந்திருந்து கஞ்சா பயன்படுத்த முயற்சித்த நிலையில் குறித்த இளைஞன் இவ்வாறு பொலிஸாரிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

1 comment:

  1. Nallam ippadi news ellam potu theriyathavanukum solli kodunga

    ReplyDelete

Powered by Blogger.