Header Ads



கோடீஸ்வரரால் தவறவிட்ட, ஒருகோடி ரூபா எழுதப்பட்ட காசோலைகளை பொலிஸில் ஒப்படைத்த நபர்

இரா­வணா எல்ல நீர்­வீழ்ச்­சியின்  அரு­கா­மை­யி­லுள்ள கற்­பாறை ஒன்றின் மீது வைக்­கப்­பட்­டி­ருந்த கைத்­துப்­பாக்கி, 25 ரவைகள், வங்­கி­யில்­பணம் எடுக்கும் அட்­டைகள் மற்றும் பெறு­ம­தி­மிக்க ஆவ­ணங்கள் அடங்­கிய கைப் பையைக் கண்­டெ­டுத்த நபர் ஒருவர் அதனை எல்­ல­பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைத்­துள்ளார் என எல்ல பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­கா­ரிஎல்.டி.என். கரு­ணா­ரட்ன தெரி­வித்தார்.

அவர் இது தொடர்பில் தொடர்ந்து கூறு­கையில், கம்­பு­ரு­பிட்டி என்ற இடத்தைச் சேர்ந்த  கோடீஸ்­வ­ர­ரான   ஒருவர்  தனது கெப் வாக­னத்தில்  இரா­வணா எல்ல நீர்­வீழ்ச்­சியைச் பார்க்கச் சென்­றுள்ளார்.

அங்கு கெப் வாகனம் பழு­த­டைந்­ததால்  அதி­லி­ருந்த  கைப்­பையை நீர்­வீழ்ச்­சிக்கு அருகே கற்­பாறை ஒன்றில் வைத்து விட்டு வாக­னத்தை திருத்­தி­யுள்ளார். வாகனம் திருத்­திய பின்னர் அவர் தனது கைப்­பையை  மறந்து விட்டுச் சென்­றுள்ளார். 

தான் கைப்­பையை தவ­ற­விட்டதை உணர்ந்து கொண்ட பின்னர் அவர் மீண்டும் குறித்த இடத்­துக்கு வந்து பார்த்த போது அது அங்கு காணாமல் போயி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து அவர் எல்ல பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

இது தொடர்­பான விசா­ர­ணையை ஆரம்­பித்த அரை மணித்­தி­யா­லத்தில்,எல்ல பகு­தியைச்  சேர்ந்த டி.எம்.விஜ­ய­சே­கர என்­பவர் கைப்­பையை என்­னிடம் ஒப்­ப­டைத்தார்.

இத­னை­ய­டுத்து உட­ன­டி­யாக கைப்­கையை தவ­ற­விட்ட கோடீஸ்­வ­ரரை பொலிஸ் நிலையம் வர­வ­ழைத்து குறித்த கைப்­பையை ஒப்­ப­டைத்தேன் என்றார்.

அக் கைப்­பையில் கைத்­துப்­பாக்கி ஒன்று 25 ரவைகள் ஒரு கோடி ரூபா எழு­தப்­பட்ட காசோ­லைகள், வங்கியில் பணம்  மீளப் பெறும்  அட்டைகள் மற்றும் பெறுமதியான ஆவணங்கள்,தேசிய அடையாள அட்டை ஆகியனவும் இருந் துள்ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

(எம்.செல்வராஜா)   

1 comment:

  1. கைத்துப்பாக்கியின் உண்மை தன்மை என்ன இவருக்கு பாவிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?

    ReplyDelete

Powered by Blogger.