Header Ads



சீனாவுக்கு மகிந்த எச்சரிக்கை

அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீனாவின் முதலீட்டுத் திட்டங்களுக்காக வழங்கும் போது, பொதுமக்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்று, சீனாவுக்குச் சென்றிருந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார்.
ஒருவார காலப் பயணமாக சீனா சென்றிருந்த மகிந்த ராஜபக்ச, சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் வெளிவிகார செயற்பாடுகள் தொடர்பான முதன்மை அதிகாரியும், அரசவை உறுப்பினருமான யாங் ஜிச்சியை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
இந்தச் சந்திப்பின் போது, மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர், சிறிலங்கா மக்களுக்கு நன்மையளிக்கும் பொருளாதார  அபிவிருத்தித் திட்டங்களை தாம் எதிர்க்கப் போவதில்லை என்று யாங் ஜிச்சியிடம் உறுதி அளித்துள்ளார்.
அதேவேளை, அம்பாந்தோட்டையில் சீன முதலீட்டுத் திட்டங்களுக்காக 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை ஒதுக்கீடு செய்யும் போது, பொதுமக்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார்.
முன்னர் திட்டமிட்டிருந்தபடி, முதலில் 750 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிவிட்டு, தேவைப்பட்டால் படிப்படியாக நிலத்தில் அளவை அதிகரித்திருக்க முடியும் என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சீனாவுக்குச் செல்வதற்கு முன்னதாக, 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்துக்கு மகிந்த ராஜபக்ச எதிர்ப்புத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.