Header Ads



ஏதாவது பிரச்சினை ஆரம்பித்துவிட்டால்..?

-M.JAWFER JP-

தொண்டுதொட்டு முஸ்லிம்களுக்கு எதிரிகள் தனி நபராகவும், குழுவாகவும், மாற்று மதம் உட்பட முஸ்லிம்களுக்குள்ளேயே முஸ்லிம்களின் எதிரிகள் உருவாவது ஒரு சர்வசாதாரணமாகிவிட்டது.இதற்கான பிரதான காரணம் காழ்ப்புணர்ச்சி. இது நமது தந்தை ஆதம் (அலை) அவர்களின் நேரடி மகன்கள் இருவருக்கிடையிலும் நடந்த ஒரு நன்மையான விடயத்தில் ஒருவருடைய நன்மை ஏற்றுக்கொள்ளப்பட்டது மற்றவருடையது ஏற்றுக்கொள்ளப்படவில்லை இதன் விளைவு தனது ஒன்றுவிட்ட சகோதரனை கொலை செய்யும் அளவுக்கு போய்விட்டது.இதன் பின்னணியும் காழ்ப்புணர்ச்சிதான்.

இன்று இலங்கையிலும் ஏற்பட்டு இருக்கும் பிரச்சினைக்கு பிரதான காரணம் இந்த காழ்ப்புணர்ச்சிதான் .இதற்க்கு நம்மவர்களும் காரணமாக அமைந்து விடுகின்றார்கள்.நமது ஆடம்பர வாழ்க்கை மற்றவர்களை கவர்ந்து இழுப்பதால் ஏற்ப்படும் பிரச்சனைகளை நாம் பொதுவாக சிந்திப்பதில்லை. நம்மவர்களில் அதிகமானவர்கள் மற்றவர்களுக்கு காட்டுவதற்காகவே வாழ்கின்றார்கள். வட்டிக்கி வாங்கியோ மற்றவர்களைப்போல் வாழவேண்டும் என்ற போக்கில் ஆடம்பரம் காட்டுவது மற்றவர்களின் மனதை தொட்டு விடுகின்றது.

இவ்வாறான வாழ்க்கை அல்லாஹ்வும் ரசூலும் சொல்லித்தராத மோசமான முன்மாதிரிகள் உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள் என அல்லாஹ் சொல்கிறான். உணவுக்காக கறி சமைத்தால்  தண்ணிரை கொஞ்சம் அதிகப்படுத்தி அடுத்த வீட்டுக்கும் கொடுங்கள் அவ்வாறு கொடுக்க முடியாவிட்டால் வாசனை வெளியில் போகாமல் குறைத்துக்கொள்ளுங்கள் என்றுநபி (ஸல்)அவர்கள் சொன்னார்கள் மக்கள் மத்தியில் மனங்களை ஓன்று படுத்திக்கொவதர்க்காக. இந்த விடயங்களையும் நமது வீட்டு விருந்துகள் திருமணங்கள் போன்ற நிகழ்வுகளில் கையாளப்படும் ஆடம்பரங்கள் மாற்று மதத்தவர்களை விட நமது சமுகத்தில் கீழ்மட்டத்தில் வாழும் மக்கள் மனதால் கொதிக்கின்றார்கள். இதை எல்லாம் அல்லாஹ் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான்.

இவ்வாறு ஆடம்பரம் செய்யும் பணத்தின் வருமானம் நூறு வீதம் ஹலாலாக இருக்குமா என்றாலும் அங்கும் சந்தேகம்தான். தான் செய்யும் கொடுக்கல் வாங்கல்களுக்கு மனிதர்கள் கேட்கும் கேள்விக்கு ஹலால் என்று நிருபிக்க சில கருத்துக்களை வைத்துக்கொள்வது மன சாட்சிப்படி தப்பு என்று தெருந்து இருந்தும் ஆடம்பர வாழ்க்கைக்காக ஹராம் அல்லது சந்தேக உழைப்பு என்று தெரிந்து கொண்டு செய்வதை காணக்கூடியதாக இருக்கிறது.

நமது வியாபாரிகளை எடுத்துக்கொண்டால் முற்பணத்துக்கு ஒரு பொருளுக்கு ஒரு விலையும் கடனாக இருந்தால் காலத்தின் அளவுக்கேற்ற விலையும் விற்று பெயர் குறிப்பிடாத வட்டியாக வட்டியை பெற்றுக்கொள்ளும் காட்சிதான் இலங்கை முஸ்லிம்களின் அதிகமானவர்களின் வியாபாரமாக இருக்கிறது.ஒரு பொருளைப்பற்றி  முன்பின் தெரியாமல் ஒருவன் வாங்க வந்தால் அதற்க்கு பல மடங்கு விலையை கூட்டு தலையில் கட்டிவிடும் வியாபாரிகள் நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம் என்று சிந்திக்க மாட்டோம். இவை அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான்.அதன் விளைவு சோதனையாகவும், தண்டனையாகவும், எச்சரிக்கையாகவும் மாற்று மதத்தவர்களைக்கொண்டு பயம் காட்டும்போதும் நாம் திருந்துவதாக இல்லை.
தொழில் போட்டியின் காரணம் வங்கிகளில் வட்டிக்காக தற்காலிக கடன் நீண்ட காலக் கடன் போன்றவற்றில் விழுந்து வட்டியும் கட்ட முடியாமல் முதலையும் கட்ட முடியாமல் தவிக்கும் நம்மவர்கள் எத்தனை பேர்? பேருக்கும் புகழுக்கும் வாகனங்கள் வாங்கி வெளிச்சம் போடும் நம்மவர்கள் எத்தனை பேர் இதையல்லாம் பார்க்கும் அவர்கள் நம்மீது வெறுப்புக்கொள்ளும் காட்ச்சிதான் அதிகம்.கடன் வாங்கியே வீட்டு அலங்காரங்கள் இவை எல்லாம் இஸ்லாம் நமக்கு போதித்த விடயமா?

உலகின் இன்று எத்தனை கோடி மக்கள் ஒரு நேர உணவுக்கு வழி இல்லாமல் செத்து மடிகின்றார்கள் இதையல்லாம் நாம் கொஞ்சம் சிந்தித்து நமது ஆடம்பரங்களை குறைத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினோமா? 

பள்ளிகளை திட்டமிட்டு பிரதான  பாதை ஓரங்களில்தான் மிகவும் அலங்கரிக்கப்பட்டு கட்டுகின்றோம் .பள்ளிகள் தொழுகையை கொண்டு மக்கள் நிறையாவிட்டாலும் அழகு படுத்திக்கொண்டு தம்பட்டம் அடிக்கிறோம் ஈட்டிக்கு போட்டியாக பள்ளிகளை கட்டி நாம் பெருமையடிக்கிறோம் ஆனால் மாற்று மதத்தவர்கள் அதனை சகிக்காமல் அவர்களின் வெறுப்பை பல வகையிலும் காட்டுகின்றார்கள்.

நாம் ஒன்றை மட்டும் மனதில் கொள்ள வேண்டும் நாம் வாழும் நாடு ஒரு பௌத்த பெரும்பான்மையான நாடு அதில் நாம் பல வகையான சுதந்திரத்துடன் வாழ்கின்றோம் அதை நாம் கொஞ்சம் அடக்கமாக இரகசியமாக பொறுப்புடன் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும்படி இல்லாமல் வாழப்பழக வேண்டும்.

ஏதாவது பிரச்சினை ஆரம்பித்துவிட்டால் பாதிக்கப்படும் முஸ்லிம்களுக்கு முஸ்லிம் நாடுகளோ அரபு நாடுகளோ நேரடியாக எந்த உதவிகளும் செய்யாது செய்யவும் முடியாது.அதற்க்கு உதாரணம் தற்போது அரபு நாடுகளில் நடக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான கொலை வெறித்தாக்குதல்கள். பலஸ்த்தீனிலும்,சிரியாவிலும் ஈராக்கிலும்,பர்மாவிலும் ஆப்கானிஸ்தானிலும் பல இலட்சம் மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றார்கள். முஸ்லிம் நாடுகள் எதையும் செயய முடியாமல் அறிக்கை விட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.இந்த அறிக்கைகள் எந்தப்பிரயோசனமும் அளிக்காது நமது பிரச்சினையை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆகவே, பிரச்சினை வராமல் நாம் நடந்துகொள்ள வேண்டும். வெளிச்சம் போட்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்வதை நிறுத்தி அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களும் காட்டித்தந்த வாழ்க்கையை வாழ்வோம்,அல்லாஹ் நமக்கு தந்துள்ளதர்க்கு நன்றி செலுத்துவோம், பொறுமையை கொண்டும் தொழுகையை கொண்டும் அல்லாவிடம் உதவியும் தேடுவோம், நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி வரும்.வஸ்ஸலாம்.  

No comments

Powered by Blogger.