Header Ads



மன்னிப்புக்கோர தயார் - நஸீர் அஹமட்

கிழக்கு மாகாண முதலமைச்சர் தன் மீது அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணையின் போது மன்னிப்புக்கோரச் சொன்னால் தான் மன்னிப்புக்கோருவேன் எனத் தெரிவித்துள்ளார்.

கடற்படை அதிகாரி ஒருவரை அவதூறாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்அஹமட் பேசியதாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, கிழக்கின் முதலமைச்சருக்கு எதிராக மட்டக்களப்பில் உள்ள பௌத்த பிக்குகள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் முதலமைச்சர் மன்னிப்பு கோரவேண்டும் என்று வலியுறுத்தியே குறித்த ஆர்ப்பாட்டம் பௌத்த பிக்குகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக மட்டக்களப்பு மங்களாராமய விஹாரையின் மதகுரு அம்பிட்டியே சுமனரத்னதேரர் இன்று காலை முதலமைச்சரின் வீட்டுக்கு சென்று அவரை மன்னிப்பு கோருமாறுவலியுறுத்தினார்.

எனினும் இதன் பின்னர் கருத்துரைத்த முதலமைச்சர், இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம்முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாக குறிப்பிட்டார்.

இதேவேளை இந்தவிசாரணையின் பின்னர் தாம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கோரப்பட்டால் மன்னிப்புக்கோர தயாராக இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

9 comments:

  1. நிருவாக ரீதியாக மாகாண முதலமைச்சர்கள் யாவரும் அதிகாரம் குறைந்தவர்களாகவே வைத்திருக்கப்படுகின்றார்கள். இதனால் ஆளுனர்கள் அவர்களை ஆட்டிப்படைப்பதற்கு வழிசமைத்துக்கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதை மாற்றுவதற்கு போராடுவதற்குத் தெம்பில்லாத மு.காவும் அதன் கையாலாக முதலமைச்சரும் யாரிலோ இருக்கும் கோபத்தை வேறுயாரிலோ காண்பித்துவிட்டு ஏன் இப்படி அவமானத்திற்குள்ளாக வேண்டும்..?

    ReplyDelete
  2. ஒரு நாட்டு இராணுவ தளபதியை அவ்வாறு திட்ட ஒரு போதும் இடம் அளிக்கக்கூடாது.

    ReplyDelete
  3. ஆளுனரை மாற்றினால், அரசு இன்னொரு ஆளுனரை அனுப்பும்.

    வட மாகாண முதலமைச்சர், ஆளுனருடன் தடுமாறுவது தெரியாதா?

    ReplyDelete
  4. ஆளுனரை மாற்றினால், அரசு இன்னொரு ஆளுனரை அனுப்பும்.

    வட மாகாண முதலமைச்சர், ஆளுனருடன் தடுமாறுவது தெரியாதா?

    ReplyDelete
  5. நாசீர் அவர்களே, எந்த விடயத்திலும் தெளிவும் உறுதியும் இருக்க வேண்டும். கேட்கச் சொன்னாள் மன்னிப்புக் கேட்பேன் என்றால் அதன் அர்த்தம் என்ன? நாங்கள் நாசுக்காக ஒன்றை மட்டும் சொல்கிறோம் உங்களது தலைகனத்தாலும் இக்கட்டான அரசியல் சூழ்னிலைகளில் எப்படி அதை சம்மளிப்பது என்ற அறிவும், அனுபவக் குறைவுமே, எதிரியின் பக்கம் இருக்க வேண்டிய பந்து இப்போது உங்கள் பக்கம் உள்ளது. எவ்வளவு விரைவாக அந்த பந்தை எதிரியின் பக்கம் அடித்து விட்டு விளையாட்டை ஆரம்பிக்கிறீர்களோ அவ்வளவு விரைவாக அது உங்களுக்கு சாதகமாக இருக்கும். இனியும் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

    ReplyDelete
  6. நாசீர் அவர்களே, எந்த விடயத்திலும் தெளிவும் உறுதியும் இருக்க வேண்டும். கேட்கச் சொன்னாள் மன்னிப்புக் கேட்பேன் என்றால் அதன் அர்த்தம் என்ன? நாங்கள் நாசுக்காக ஒன்றை மட்டும் சொல்கிறோம் உங்களது தலைகனத்தாலும் இக்கட்டான அரசியல் சூழ்னிலைகளில் எப்படி அதை சம்மளிப்பது என்ற அறிவும், அனுபவக் குறைவுமே, எதிரியின் பக்கம் இருக்க வேண்டிய பந்து இப்போது உங்கள் பக்கம் உள்ளது. எவ்வளவு விரைவாக அந்த பந்தை எதிரியின் பக்கம் அடித்து விட்டு விளையாட்டை ஆரம்பிக்கிறீர்களோ அவ்வளவு விரைவாக அது உங்களுக்கு சாதகமாக இருக்கும். இனியும் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

    ReplyDelete
  7. Good comment.also muslims should behave with kind with others

    ReplyDelete
  8. பல்லின மக்கள் வாழும் இந்த இலங்கையில் சகல இன மக்களாலும் தேர்ந்தடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் பல்வேறு பிரச்சினைகள் அரச அதிகாரிகளுக்கும், இராணுவ போலிஸ் அதிகாரிகளுக்கும் மேல் மட்டத்தில் உள்ளவர்களால் மடையன்,கழுதை,எருமைமாடு, கழுதை என்ற வார்த்தைகளால் அதிகாரிகளை திட்டித்தீர்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் அடி உதைகளும் கொடுத்து கேவலப்படுத்திய வரலாறுகள் பெரும்பான்மை இனத்தவர்களினால் நடந்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை.கடந்த மஹிந்த ஆட்சிக்காலத்தில் பிரித்தானியாவுக்கான துரதுவர் ஒருவருக்கு MPபாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதே நாட்டில் வைத்து அறைந்து பல்லு உடைந்ததற்கு யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை பாதையில் இறங்கி எதிர்ப்பு காட்டவில்லை.

    ஆனால் இன்று சிறு பான்மையை சேர்ந்த ஒருவருக்கு ஏற்ப்பட்ட அவமானத்துக்கு அவர் வாய் திறந்ததால் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பலைகள் கிளம்புவது வேடிக்கையாக உள்ளது.இந்த சந்தர்ப்பத்தில் குலைந்த குட்டையில் மீன் பிடிக்கும் நம்முடைய ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசியல் செய்ய ஆர்வம் கொள்வதும் கசப்பான உண்மை.

    அனைத்து முஸ்லிம் கட்சிகளும் கட்சி பேதங்களை மறந்து இத்கார்க்கு எதிப்பை காட்ட வேண்டும் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்ப்பட்ட தவரை இந்தளவுக்கு பெருது படுத்தி இனவாதிகள் களத்தில் இறங்கி சந்தர்ப்ப அரசியல் இலாபம் தேடும் பணியில் இறங்கியுள்ளார்கள்.

    உண்மையான தேசப்பற்றும் சமுக நல்லிணக்கத்தை விரும்பும் மக்களாக இருந்தால் கடந்த வாரங்களில் இடம் பெற்ற அனர்த்தத்தில் முஸ்லிம்கள் நடந்து கொண்ட முறையை நொடிப்பொழுதில் மறந்து இருக்க மாட்டார்கள்.
    you just thing before upload your commend ok

    ReplyDelete
  9. மன்னிப்பு கோர தயார் என்றால் தான் செய்தது தவறு என கௌரவ முதலமைச்சர் ஏற்றுக் கொள்கின்றார் என அர்த்தம் அல்லவா? தான் ஏன் அவ்வாறு நடந்து கொண்டேன் எனபதற்கான ஆதாரங்களை ஏன் முதலைமசசர் அவர்களால் ஊடகங்களுக்கு video clip மூலம் முன் வைக்க முடியவில்லை.நமது அரசியல் வாதிகள் ஏன் இவ்வாறு அச்சம் கொள்கிறார்கள். தைரியமாக செயற்படட அமைசசர் மன்னிப்பு கோர தயார் எனக் கூறுகின்றார்.இது அவ்வளவு ஆரோக்கியம் இல்லை.மேலும் முதல் அமைச்சர் அவர்களுக்கு சகல அதிகாரங்களும் வழங்க வேண்டும் என அனைத்து சிறுபான்மை அரசியல் வாதிகளும் முன்வர வேண்டும் என்பது அவா.எனவே அனைவரும் ஒன்று பட வேண்டும்.எது எப்படி இருந்தாலும் மன்னிப்பு கேட்பது இஸ்லாத்தின் சிறந்த பண்பாகும்.

    ReplyDelete

Powered by Blogger.