Header Ads



கணவர் மனைவியை அடிப்பதை, சட்டபூர்வமாக்க பரிந்துரை

கணவர்கள் அவர்களின் மனைவியை அடிப்பதை சட்டபூர்வமாக்க பரிந்துரைகளை வழங்குவதற்கு பாகிஸ்தான் நாடாளுமன்ற ஆலோசனை அமைப்பு ஒன்று விவாதித்து வருகிறது.

சமூகத்திலுள்ள பெண்களை பற்றிய நூற்றுக்கணக்கான பரிந்துரைகளை இஸ்லாமிய கருத்தியலின் கவுன்சில் ஒன்று உருவாக்கி வருகிறது.

கணவன் மனைவியை லேசாக அடிக்கலாம் என்று ஒரு வரைவு பரிந்துரைக்கிறது.

எடுத்துக்காட்டாக மனைவி ஆடை அணிந்திருப்பதை கணவன் ஏற்க மறுத்தாலோ அல்லது உடலுறவுக்கு அழைத்தால், அதற்கு மத காரணங்களின்றி வர மறுத்தாலோ, அல்லது அந்நியரோடு அவள் உரையாடினாலோ கணவன் மனைவியை லேசாக அடிக்கலாம்.

மதக் குருமார்களின் இந்த விவாதத்திற்கு கோபமான எதிரலை கிளம்பியிருக்கிறது.

‘இத்தகைய விதிமுறைகள் 7 ஆம் நூற்றாண்டு அரேபியாவுக்கு சரியானதாக இருக்கலாம். இன்றல்ல‘, என்று ஒரு பெண் பத்திரிகை கட்டுரையாளர் தெரிவித்திருக்கிறார். BBC

4 comments:

  1. பாகிஸ்தானைக் கற்காலத்திற்கே அனுப்புவோம் என்று முன்னர் யாரோ ஒரு அமெரிக்க ஜனாதிபதி (ஜோர்ஜ் புஷ் ஜுனியர் / சீனியர் ?) எச்சரித்ததாக செய்திகள் வந்ததாக ஞாபகமுள்ளது.

    அவர்களை யாரும் சிரமப்பட்டுக் கொண்டு செல்லத்தேவையில்லை. அவர்களாகவே கற்காலத்திற்கு போய்ச்சேருவார்கள் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு!

    ReplyDelete
  2. eanna di loosu mathiri comment pannurai....? lesa adikalam endu islam solluthu,

    ReplyDelete
  3. JJ நீங்க பயப்படாதீங்க.இது பாகிஸ்தானில்தான்,இலங்கையில் அல்ல.

    ReplyDelete
  4. சிலருக்கு இருப்பது மாறி, இன்னுமொன்று முளைப்பதை உணர்ந்தால் இப்படிதான் கிறுக்குத் தன்மாக நினைப்பதெல்லாம் பேசத்தோன்றும்..JJ

    ReplyDelete

Powered by Blogger.