Header Ads



ஐக்கிய இராச்சிய லெஸ்டர் நகரில் இலங்கை முஸ்லிம்களின் பள்ளிவாசல் திறப்பு விழா* .

கடந்த 9 வருடங்களாக இலங்கை முஸ்லீம் ,சகோதர சகோதரிகளின் கடும் உழைப்பின் பயனாக அல்லாஹ்வின்  அருளால் கிடைக்கபெற்ற மஸ்ஜிதுல் அன்ஸார் என்ற பள்ளிவாசல் எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் திகதி ஐக்கிய இராச்சியத்தின்  லெஸ்டர் நகரில்  திறந்து வைக்கப்படவுள்ளது .

இந்த நிகழ்வில் அகில இலங்கை ஜமீய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஷ்வி முப்தி பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பிப்பதுடன் மஸ்ஜிதுல் அன்சாரையும் திறந்து வைப்பார் .

ஐக்கிய இராச்சிய லெஸ்டர்  ஸ்ரீ லங்கா முஸ்லீம் பவுண்டேசன் என்று அழைக்கப்பட்டு வந்த அமைப்பின் கடும் முயற்சியால் இந்த பள்ளிவாசல் முயற்சி கைகூடியுள்ளது .

இதுவரை காலமும் தற்காலிக இடம் ஒன்றின் மஸ்ஜிதுல் அப்ரார் என்ற பெயரில் பள்ளிவாசல் ஓன்று நடத்தப்பட்டு வந்த நிலையில் ஆலயம் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு நிரந்தர பள்ளிவாசலுக்கான இடம் ஒன்றாக மாற்றப்பட்டு புனரமைப்பு செய்யப்பட்டது .

இலக்கம் 39 Edgehill Road, Leicester LE4 9EA  என்ற விலாசத்தில் அமைந்துள்ள
மச்ஜிதுல் அன்ஸாரின்  அங்குரார்ப்பண

வைபவம் மாலை 4.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு இரவு 9 மணி வரை இடம்பெறும் .

இவ்விழாவில் சிறப்பு பயான் நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இரவு போசனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அனைத்து முஸ்லீம்களும்  இதில்  கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்பாய் அழைக்கப்படுகிறார்கள்.

3 comments:

  1. Alhamdulillah,It is a great thing that our SL Muslims have done. At the same time I can't resist mentioning,from what I heard, that the property (20 perches with a building in it) was bought for about 50 million SLR!from the church. while in Srilanka 19 perches land bought from a Muslim for about 35 million SLR by the mosque which is situated interiorly. I thing that the Srilankan lands are more expensive than the British ones??? Allah only Knows!

    ReplyDelete
  2. How many lankans in Leicester ? How many Masjids between them ??

    ReplyDelete
  3. இந்த பள்ளி வாசல் இலங்கை முஸ்லிம்களுக்கு என சொல்லுவதைவிட இலங்கை முஸ்லிம் தப்லீக் ஜமாத்தின் பள்ளி என்று சொல்லுவது பொருத்தம் என நினைக்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.