Header Ads



கடூ­ழிய சிறை­த்தண்­ட­னையிலிருந்து காப்பாற்றப்பட்ட மஹிந்த, பசில், கோத்­தபாய


ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைமைப் பத­வியை ஏற்­றி­ருக்­காது விட்­டி­ருந்தால் மஹிந்த ராஜபக்ஷ, கோத்­தபாய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ஆகிய மூவரும் இன்று கடூ­ழிய சிறை­த்தண்­ட­னைக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருப்­பார்கள். ஐக்­கிய தேசியக் கட்­சியின் சுய­ரூபம் வெளி­வந்­தி­ருக்கும் என ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் ஊடகப் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். மஹிந்­த­வுடன் இருந்­த­வர்கள் அவரை கைவிட்­ட­போதும் ஜனா­தி­ப­தியும் நாமுமே அவ­ருடன் இருந்தோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

ஐக்­கிய தேசியக் கட்சி எப்­போதும் கடும்­போக்கு கொள்­கையில் இருந்து செயற்­பட்­ட­மைக்­கான வர­லா­றுகள் தான் உள்­ளன. அதேபோல் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் குடும்ப அர­சாங்­கத்தின் மீது உள்ள விரோ­தமும் எமக்குத் தெரியும். அவ்­வாறு இருக்­கையில் கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் ஏற்­பட்ட அர­சியல் தளம்பல் நிலை­மை­களின் போது கட்­சியின் தலை­மைத்­து­வத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரிபால சிறி­சேன ஏற்­றி­ருக்­கா­விடின் இன்று நிலை­மைகள் மிகவும் மோச­மா­ன­தாக அமைந்­தி­ருக்கும்.

அதேபோல் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ, கோத்­தபாய ராஜபக் ஷ, மற்றும் பசில் ராஜபக் ஷ ஆகிய மூவரும் கைது­செய்­யப்­பட்டு இன்று மூவ­ருக்கும் கடூ­ழிய சிறைத்­தண்­டனை வழங்­கப்­பட்­டி­ருக்கும். ஐக்­கிய தேசியக் கட்­சியின் கைவ­ரி­சையை காட்­டி­யி­ருப்­பார்கள். அவ்­வாறு இருக்­கையில் ஜனா­தி­ப­தியும் நானும் கட்­சிக்குள் இருந்­த­தனால் தான் இவர்­களை காப்­பாற்ற முடிந்­தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

2 comments:

  1. Saaaaaaaaaaa.became good joker.charly chaplin duplicate

    ReplyDelete
  2. The culprits have been given protection, they could continue their business in the future as well! விந்தையான உலகம், விசித்திரமான மக்கள், 'ஏ'மாற்றம் கொண்டு வரும் அரசியல்!

    ReplyDelete

Powered by Blogger.