Header Ads



என்னை பதவி விலக்கி, மக்களின் கன்னத்தில் அறைந்துள்ளனர் - மைத்திரியை சாடும் கீதா

எவரிடமும் மண்டியிட நான் தயாரில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

பென்தர எல்பிட்டிய தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை குறித்து கீதா குமாரசிங்க ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

பென்தர எல்பிட்டிய தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு வேறு ஒன்றும் காரணமல்ல.

எதிர்காலத்தில் இந்த தொகுதியை ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்ட வேண்டும் என்பதற்காகவே எனது பதவி பறிக்கப்பட்டது.

தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து என்னை நீக்கியதன் ஊடாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் என் மீது கை வைக்கவில்லை. வீரம் மிக்க பென்தர எல்பிட்டிய மக்களின் மீதே கை வைக்கப்பட்டுள்ளது.

தெற்கின் ஒரே பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கடமையாற்றி வரும் என்னை தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்காவிட்டால் தலைவர்கள் தங்களது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாது.

இதுவே என்னை தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கக் காரணம். இந்த தீர்மானம் மிகவும் பிழையானது.

18 ஆண்டுகளின் பின்னர் பென்தர தொகுதியை 18000 மேலதிக வாக்குகளின் ஊடாக வெற்றியீட்டினேன். என்னை பதவி விலக்கி மக்களின் கன்னத்தில் சுதந்திரக் கட்சி தலைவர்கள் அறைந்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றியீட்டச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயற்பட்டு வருகின்றனர். புதிதாக நியமிக்கப்பட்ட தொகுதி அமைப்பாளர்களினால் 5000 வாக்குகளையேனும் பெற்றுக் கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.