Header Ads



கத்தாரையும், சவுதியையும் தாக்கிய மழை வெள்ளம் . விசாரணைக்கும் உத்தரவு


கத்தாரில் ஒரு ஆண்டு முழுதும் பெய்யும் மழை ஒரு சில மணி நேரங்களில் கொட்டித் தீர்த்ததை அடுத்து நாடே ஏறக்குறைய ஸ்தம்பித நிலைக்கு வந்தது.

கடந்த ஆண்டுதான் திறக்கப்பட்ட ஹமாத் சர்வதேச விமான நிலையத்தின் கூரையினூடாக தண்ணீர் அருவி போல வழிந்தது.

விமான நிலையக் கட்டுமானத்தின் தரம் குறித்து பிரதமர் விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இந்த விமான நிலையம், 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுவதற்கு முன்னர் நடத்தி முடிக்கப்பட்ட கட்டிட வேலைகளில் ஒன்றாகும்.


அண்டை நாடான சௌதி அரேபியாவிலும் பெய்த மழையில், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. தலைநகர் ரியாத்தில் கார்கள் மழை நீரில் மூழ்கின.

கிழக்குப் பகுதி நகரான அல் ருமய்லாவில், மழை நீர் சாலையில் ஒன்பது மீட்ட அகலமுள்ள ஒரு படுகுழியை உருவாக்கி, ஒரு காரையே விழுங்கிவிட்டது.

காரில் பயணித்த இருவர் நீந்தி உயிர் தப்பினர்.


No comments

Powered by Blogger.