Header Ads



அம்பறை மாவட்ட அரசியல் அதிகாரம், முஸ்லிம் காங்கிரஸ் வசம் - ஹரீஸ் பெருமிதம்

(ஹாசிப் யாஸீன்)

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் நியமிக்கபட்டுள்ளமை அம்பாறை மாவட்ட மக்களுக்கும் கட்சிக்கும் கிடைத்த ஒரு கௌரவமாகும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் வேண்டுகோளின் பேரில் இந்நியமனத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் வழங்கப்பட்டதையிட்டு மகிழ்ச்சியடைவதோடு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களுக்கு பின்னர் அம்பறை மாவட்டத்தின் அபிவிருத்தி குழுத் தலைவராக சிறுபான்மையைச் சேர்ந்த அதுவும் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை எமது கட்சிக்கும், மக்களுக்கும் கிடைத்த பெரும் கௌரவமாகும்.

அம்பாறை மாவட்டத்தின் அரசியல் அதிகாரம் இன்று முஸ்லிம் காங்கிரஸின் கைகளில் கிடைக்கப்பெற்றமை கட்சியின் போராளிகளினதும்,  ஆதரவாளர்களினதும் மனங்களில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது.

எதிர்வரும் காலங்களில் எமது மாவட்ட அபிவிருத்திகள் தங்குதடையின்றி நடைபெறும் என்பதில் ஐயமில்லை என்பதோடு அபிவிருத்தி குழுத்தலைவர் தனது பணிகளை வெற்றிகரமாக தொடர வாழ்த்துகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. ஹரீஸ் அவர்களே, நீங்கள் எவ்வளவுதான் திருப்தியும், பெருமிதம் உங்களுக்குள்ளே அடைந்தாலும், முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமையும் மக்களுக்காக மறைந்த தலைவருக்கு பிறகு சரியான நியாயமான அரசியல் முன்னெடுப்புக்களை எடுக்கவில்லை என்பதை மறந்து விடாதீர்கள். உலகத்தில் நாம் அறிந்தவரையில் இரண்டு செயலாளர்களும் நன்கு உப தலைவர்களும் ( சோவின் முகமத் பின் துக்ளக் கதை மாதிரி ) ஹக்கீமின் கட்சியில் தான் உள்ளது. மக்கள் மத்தியில் தான் தோன்றி தனமாக வாக்குரிதிகளும் அள்ளி வீசும் தலைமை இன்னும் தேசியப் பட்டியலையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியாமல், மூத்த போராளிகளையும், திறமை வாய்ந்த போராளிகளையும் புறக்கணித்து, மிகவும் தியாகத்தின் மத்தியில் வளர்க்கப்பட்ட கட்சியை பற்றிய எந்த கவலைகளும் இன்றி, முடிந்த வரை தான் மட்டும் அனுபவித்துக் கொண்டிருக்கும் தலைமையும், அதன் அடிவருடிகளும், எதிர் காலத்தில் அதன் பலனை அனுபவிப்பது மிகத்தொலைவில் இல்லை என்பதை இச் சந்தர்பத்தில் சுடிக்காட்ட விரும்புகிறோம். நிட்சயமாக மாற்று அரசியல் இயக்கம் முஸ்லிம்களுக்கு தேவை என்பதை அரசியல் அவதானிகளும், சமூக ஆர்வலர்களும், கல்விமான்களும், துடிப்புள்ள இளைஞர்களும் உணரத் தொடிங்கி உள்ளார்கள் என்பதையும் சுட்டிகாட்ட்ட விரும்புகிறோம்.

    ReplyDelete
  2. ஹரீஸ் அவர்களே, நீங்கள் எவ்வளவுதான் திருப்தியும், பெருமிதம் உங்களுக்குள்ளே அடைந்தாலும், முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமையும் மக்களுக்காக மறைந்த தலைவருக்கு பிறகு சரியான நியாயமான அரசியல் முன்னெடுப்புக்களை எடுக்கவில்லை என்பதை மறந்து விடாதீர்கள். உலகத்தில் நாம் அறிந்தவரையில் இரண்டு செயலாளர்களும் நன்கு உப தலைவர்களும் ( சோவின் முகமத் பின் துக்ளக் கதை மாதிரி ) ஹக்கீமின் கட்சியில் தான் உள்ளது. மக்கள் மத்தியில் தான் தோன்றி தனமாக வாக்குரிதிகளும் அள்ளி வீசும் தலைமை இன்னும் தேசியப் பட்டியலையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியாமல், மூத்த போராளிகளையும், திறமை வாய்ந்த போராளிகளையும் புறக்கணித்து, மிகவும் தியாகத்தின் மத்தியில் வளர்க்கப்பட்ட கட்சியை பற்றிய எந்த கவலைகளும் இன்றி, முடிந்த வரை தான் மட்டும் அனுபவித்துக் கொண்டிருக்கும் தலைமையும், அதன் அடிவருடிகளும், எதிர் காலத்தில் அதன் பலனை அனுபவிப்பது மிகத்தொலைவில் இல்லை என்பதை இச் சந்தர்பத்தில் சுடிக்காட்ட விரும்புகிறோம். நிட்சயமாக மாற்று அரசியல் இயக்கம் முஸ்லிம்களுக்கு தேவை என்பதை அரசியல் அவதானிகளும், சமூக ஆர்வலர்களும், கல்விமான்களும், துடிப்புள்ள இளைஞர்களும் உணரத் தொடிங்கி உள்ளார்கள் என்பதையும் சுட்டிகாட்ட்ட விரும்புகிறோம்.

    ReplyDelete
  3. See the muslum congres representative. Leader is going to American singers music shows and dancing with ladies.See the faces of nizam kariyappar...harees etc..no beard..they not fflowers of small sunnah..how come they represent muslims.

    ReplyDelete

Powered by Blogger.