Header Ads



மகிந்த ராஜபக்ச அணிக்குள் பிளவு..!


எதிர்கட்சி வரிசையில் அமர்வதற்கு தீர்மானித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்வதற்கு தீர்மானித்து உள்ளதை தொடர்ந்து மகிந்தராஜபக்ச அணிக்குள் பிளவு ஏற்படுவது நிச்சயமாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்தில் அடுத்தசில நாட்களில் இணையவுள்ளதை அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்திருந்தார், அரசாங்கத்தில் இணைந்த பின்னர் அவர்கள் வரவுசெலவுதிட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஏனினும் அரசாங்கம் சில பதவிகளை வழங்க முன்வந்துள்ளதை தொடர்ந்து  ஐந்து அல்லது ஆறுபேர் அரசாங்கத்தில் இணையலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய சகாவான கொழும்புமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஓரவர் அமைச்சரவை பதவி குறித்து உறுதிவழங்கப்பட்டதை தொடர்ந்து அரசாங்கத்தில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.தனது அரசியல் வாழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பை விட ஐக்கியதேசிய கட்சிக்கு சார்பாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஓரவரும் அரசாங்கத்தில் இணையவுள்ளார்.

மேலும் முன்னைய அரசாங்கத்தில் அமைச்சரவையில் அங்கம் வகித்த குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஓருவரும் அரசாங்கத்தில் இணையவுள்ளார்.

தென்மாகாணத்தை சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளர் ஓருவரும் முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகனும் தேசிய அரசாங்கத்தில் இணையவுள்ளனர்,

2 comments:

  1. குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்புனர் யாராக இருக்குமோ?
    சத்தாராக இருந்தால் மிகவும் சந்தோஷமான விடயம்.

    ReplyDelete
  2. Sattar not a Parliament member!

    ReplyDelete

Powered by Blogger.