Header Ads



லலித் கொத்தலாவலையின் மனைவியின், நகைகளை ஏலம் விட நீதிமன்றம் தீர்மானம்

செலிங்கோ நிறுவனத்தின் தலைவர் லலித் கொத்தலாவலையுடைய மனைவி சிசிலியா கொத்தலாவலையின் நகைகளை ஏலம் விட நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் செலிங்கோவின் இணை நிறுவனமான பினான்ஸ் அண்ட் கரண்டி (எப்.அண்ட் ஜி) நிறுவனத்தில் நிரந்தர வைப்புகளை மேற்கொண்டு பாரிய தொகையை இழந்துள்ள வைப்பாளர்களுக்கு பணம் வழங்க மாற்றுத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த எப் அண்ட் ஜி நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் நிலையான வைப்புப் பணம் 4.3 பில்லியன் ரூபா செலிங்கோ நிறுவனத்தினால் கையாடல் செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக பல நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

பாதிக்கப்பட்டவர்களின் வைப்புப் பணத்தை திருப்பியளிக்க செலின்கோ நிறுவனம் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதன் காரணமாக அந்நிறுவனத்தின் தலைவர் லலித் கொத்தலாவலையின் மனைவியின் பெயரில் வங்கி பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள பெருந்தொகை நகைகள் மற்றும் இரத்தினக்கற்களை ஏலத்தில் விற்பனை செய்ய கொழும்பு பிரதான நீதிமன்றம் கவனம் செலுத்தியுள்ளது.

அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாடிக்கையாளர்களின் வைப்புப் பணத்தை திருப்பிச் செலுத்துவது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக செலிங்கோவின் கோல்டன் கீ வைப்புத்திட்டத்தில் பணத்தை இழந்த ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு மத்திய வங்கியினால் நட்டஈடு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. வாரவேட்கப்படவேண்டிய முடிவு.கிழக்கு மாகாணங்களில் செறிந்து வாழும் முஸலிம்களின் கோடிக்கணக்கான பணமும் உரியவர்களிடம் போய்சேரவேண்டும். மவ்லவிமார்களின் போலியான பசப்பு வார்த்தைகளை நம்பி அதிகமான முஸ்லிம்கள் செலின்கோ இன்சுரான்சில் வைப்பில் இட்டார்கள்.
    செலின்கோ இன்சுரன்சை சூரையாடியவர்களில் முன்னால் மහිந்තனும் ஒருவன் என்பதும் யாவரும் அறிந்த விடயமே.

    ReplyDelete

Powered by Blogger.