Header Ads



வரவு செலவுத்திட்டத்தின் ஒரு சில விடயங்களை எதிர்ப்பேன் - அமைச்சர் நிமால் சிறிபால சில்வா

வரவு செலவுத்திட்டத்தின் ஒரு சில விடயங்களை எதிர்க்கப் போவதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் அங்கத்தினர் என்ற போதிலும் சில விடயங்களை எதிர்க்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் விவகாரங்களில் விமர்சனப் பாங்கினை பின்பற்றுமாறு ஜனாதிபதி சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை விமர்சனம் செய்யுமாறு சுதந்திரம் வழங்கிய நாட்டின் ஒரே ஜனாதிபதி, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமே என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்திற்கு ஆக்கபூர்வமான விமர்சனங்களின் அடிப்படையில் ஆதரளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

வங்கித்துறைசார் விடயங்கள் மற்றும் ஊழியர் சேமலாபநிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியன தொடர்பிலன விடயங்களை தாம் எதிர்க்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.