Header Ads



நான் ஓய்வு பெறும் நேரத்தில், உரையாற்ற கிடைத்ததை பெருமையாக எண்ணிக் கொள்கின்றேன் - மைத்திரி


2015ஆம் ஆண்டிற்கான 24ஆவது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு இன்று (27) ஆரம்பமானது. இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்பு உரை ஒன்றை நிகழ்த்தினார்.

அவர் ஆற்றிய உரையில்,

நான் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் தலைவர். ஓய்வு பெறும் இந்தநேரத்தில் உங்களுடன் உரையாற்ற கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை மிகப் பெருமையாக எண்ணிக் கொள்கின்றேன்.

இந்த பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு வருகை தந்திருக்கும் பிரித்தானியா மகாராணியை மிகப் பெருமையுடன் வரவேற்கின்றேன்.

மேலும், பொதுநலவாய அமைப்பின் முதல் அங்கத்துவம் பெற்ற நாடாக இருப்பதை எண்ணி பெருமையடைவதுடன், அதனுடைய வளர்ச்சியை எண்ணியும் நாங்கள் பெருமை கொள்கின்றோம்.

இவ்வமைப்பானது அனைத்து அங்கத்துவ நாடுகளினதும் அரசியல், பொருளாதாரம், விளையாட்டு போன்ற துறைகளில் ஒத்தழைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

இரண்டு வருடத்திற்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற அரச தலைவர்கள் மாநாட்டில் எம்மால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் இந்த அமைப்பின் செயற்பாடுகளை முன்னொக்கி கொண்டு செல்வதற்கு பெரும் உதவியாக இருந்தது.

சிறந்த ஒரு அபிவிருத்தியை முன்னெடுத்து செல்வதற்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இதுவொரு சிறந்த அமைப்பாக விளங்கியது.

அதுமாத்திரமன்றி, ஐக்கிய நாடுகள் சபை செயற்பாடுகளுக்கும் நாங்கள் முன்னுரிமை வழங்கியிருக்கின்றோம் என்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

சிறந்த ஒரு எதிர்காலத்திற்காக விளங்குவது தற்பொழுது உள்ள இளைஞர், யுவதிகளே ஆகும். இந்த விடயம் தொடர்பில் மாகம்புர பிரகடனம் எமது இளைஞர் யுவதிகளால் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டது வெற்றிகரமாக ஒரு விடயமாக நாம் காண்கின்றோம்.

பொதுநலவாய இளைஞர் சங்கம் அமைக்கப்பட்டு அதனுடைய முதலாவது மாநாடு இலங்கையில் நடத்தப்பட்டமை எமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்.

இந்த அமைப்பில் இருக்கும் அனைத்து நாடுகளும் வளர்ச்சியடைந்து வரும் பாதையிலே காணப்படுகின்றன.

இதில் எங்களுடைய இலக்காக விளங்குவது அந்த நாடுகளுக்கிடையே சிறந்த திட்டங்களை வகுத்து கொள்ள வேண்டும் என்பதே. அதாவது, குறுகிய கால திட்டம், நீண்ட கால திட்டம் என நாங்கள் அதை வகுத்து அதற்கேற்ப செயற்படுவோம்.

எமக்கிடையே தொழில் வாய்ப்பு அதிகரிக்க வேண்டும். வறுமை நிலையில் வாடும் மக்களின் நிலை குறைய வேண்டும். பொருளாதார ரீதியாக வளமான ஒரு நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். வர்த்தகம் மற்றம் முதலீடு ரீதியாக எமது நாடுகள் முன்னிலை வகிக்க வேண்டும்.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் தலைவர் பதவியிலிருந்து விலகி செல்லும் நான் கடந்த இரண்ட வருட காலங்களை திரும்பிப் பார்க்கம் பொழுது என்னால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளை எண்ணி பெருமிதம் கொள்கின்றேன்.

பொதுநலவாய மாநாடுகளுக்கு என்னுடைய தாய் நாடு இலங்கைக்கு அதில் வாழும் மக்களுக்கு தனிப்பட்ட ரீதியாக எனக்கும் உதவி செய்த பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா அவர்களுக்கு இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

இறுதியாக எதிர்வரும் இரண்டு வருட காலத்திற்கு தலைவராக விளங்கபோகும் மோல்டா அரசாங்கத்தின் தலைவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

No comments

Powered by Blogger.