Header Ads



'அல்லாஹ்வின் உதவியால் நாங்கள் விடுவிக்கப்பட்டுள்ளோம் - ஹிந்து சிறைக் கைதிகள் உருக்கம்

'ஹிந்து' சிறைவாசிகளை விடுவித்த முஸ்லிம்கள்..! "மதங்களை கடந்த மனிதாபிமானம்"

- சிறைத்துறை கண்காணிப்பாளர் பாராட்டு..!

உத்தரப்பிரதேச மாநிலம் 'பரேலி' மாவட்ட சிறையில் அடைபட்டுக்கிடந்த 15 'ஹிந்து' சிறைவாசிகளை முஸ்லிம்கள் நிதி திரட்டி விடுதலை பெற்றுகொடுத்துள்ளனர்.

இதுகுறித்த முழு விவரமாவது :

பரேலி மாவட்ட சிறையில் 6 மாதம் முதல் 10 ஆண்டுகள் வரை, வாழ்க்கையை கழித்துக் கொண்டிருந்த 'ஹிந்து' கைதிகள் குறித்த தகவல் கிடைக்கப்பெற்ற பரேலி முஸ்லிம்கள், மேற்படி கைதிகளின் விடுதலைக்காக செயல்பட்டு,15 ஹிந்து கைதிகளை விடுவித்துள்ளனர்.

சிறு குற்றங்களுக்காக கைதாகி, தண்டனை காலத்தை அனுபவித்த பின்பு, அல்லது அபராதம் செலுத்த முடியாமல் தொடர்ந்து சிறையில் வாடி வந்த ஹிந்து கைதிகள் செலுத்த வேண்டிய அபராதங்களை செலுத்தி, அவர்களை சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்துள்ளனர், பரேலி வாழ் முஸ்லிம்கள்.

நேற்றுமுன்தினம்(25-11-2015), விடுதலையான, மேற்படி ஹிந்து கைதிகளை சிறை வாசல் வரை சென்று வரவேற்று, அவர்தம் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கான பயண ஏற்பாடுகளை செய்து கொடுத்து, அவசியத்தேவைகளுக்கான 'பாக்கெட் மணி'யும் கொடுத்தனுப்பியுள்ளனர் மனிதாபிமானம் நிறைந்த முஸ்லிம்கள்.

ரயில்களில் டிக்கட் இல்லாமல் பயணம் செய்தல் போன்ற குற்றத்துக்காக ரூ.1,000 முதல், அவரவர் குற்ற செயல்களுக்கு ஏற்ப விதிக்கப்பட்ட அபராத தொகைகளை நீதிமன்றத்தில் செலுத்தியதையடுத்து விடுவிக்கப்பட்ட ஹிந்து கைதிகள், முஸ்லிம்களை கட்டித்தழுவி கண்ணீர் விட்டு நன்றி செலுத்தினர்.

நந்து கிஷோர், அஜய் குமார், கிஷன் சாகர், பப்பு, திலக் உள்ளிட்ட 15 கைதிகளும் 'அல்லாஹ்வின் உதவியை கொண்டே தாங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்'

முஸ்லிம்களின் மனிதாபிமான செயல்களை/ தொடர் நடவடிக்கைகளை பார்த்து மெய்சிலிர்த்த பரேலி மாவட்ட சிறை கண்காணிப்பாளர் "பி.ஆர்.மயூரா" மதங்களை கடந்த முஸ்லிம்களின் மனிதாபிமான செயலை வெகுவாக பாராட்டினார்.

இம்முயற்சியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட சமூக ஆர்வலர் 'ஹாஜி யாசீன் குரைஷி' கூறும்போது :

நாங்கள், எங்கள் சமூக அப்பாவி சிறைவாசிகளின் விடுதலைக்காக செயல்பட்டு வந்த வேளையில், சில அப்பாவி ஹிந்து சிறைவாசிகள் குறித்த தகவலும் கிடைக்கப் பெற்றதையடுத்தே, இந்த களப்பணியில் இறங்கியதாக குறிப்பிட்டார்.

இது விஷயத்தில் 'தொழிலதிபர் அனீஸ்' உள்ளிட்ட மேலும் சில முஸ்லிம்கள் பொருளாதார உதவிகள் செய்ததாகவும் குறிப்பிட்டார் 'யாசீன் குரைஷி'

2 comments:

  1. ஜப்னா முஸ்லிம் வெப்தலத்தினுள் பிரவேசிக்கும் இஸ்லாத்தினை விமர்சிப்பவர்களுக்காக.
    மாட்டிறைச்சி சாப்பிடதட்காக வீடுதேடிவந்து முஸ்லிம்களை கொலைசெய்து கோரத் தாண்டமாவடிய சிவசேனா போன்ற தமிழ் பயங்கரவாதிகளை நாம் எவராக இருந்தாலும் ஹிந்து மதத்தை சம்பந்தப்படுத்தி பொதுமக்களை வம்புக்கிழுக்கு முடியாது.அதேபோன்று இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட சோக வரலாற்று நிகழ்வு இது. 1990 காத்தான் குடி பள்ளிவாயலில் முஸ்லிம்களை பச்சிளம் பாலகர்கள் மற்றும் பெண்கள் உள்ளடன்களாக ஈவிரக்கவின்றி கொன்று குவித்ததனையும் வடக்கு முஸ்லிகள் வெளியேதரத்தினையும் தமிழ் கூட்டமைப்பு மறந்தாலும் வாரலற்றேடுகள் மறந்து விடாது. இதனையெல்லாம் ஹிந்து பயங்கரவாதம் என்றும் யாரும் கூறவில்லையே அதே போன்று ஐஎஸ்ஐஎஸ்ஸின் மனிதாபிமானமற்ற செயல்களுக்காக இஸ்லாமியர்களையோ இஸ்லாத்தினையோ சம்பந்தப்படுத்துவது நாகரீகமற்றது.மேட்கத்தேய ஏகாதிபதித்துவ முதளலாளித்துவப்பொருளாதார சுரண்டலுக்கான சதித்திட்டமே என்பதனை புரிந்தாலே போதுமானது.

    இஸ்லாம் அளித்திருக்கும் மனிதாபிமான உரிமைகள் உலகளாவியவை. மனித குலம் முழுவதற்கும் பொருந்தக்கூடியவை. அந்த உரிமைகள் ஓர் இஸ்லாமிய அரசுக்குட்பட்ட எல்லையில் வாழ்ந்தாலும் சரி, அதற்கு வெளியே வாழ்ந்தாலும் சரி, போரிட்டாலும் சரி எந்த நிலைமையானாலும் கடைப்பிடிக்க வேண்டியவையே!
    அல்குர்ஆன் இவ்வாறு தெளிவாகக் கூறிகின்றது: ‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்காக வாய்மையில் நிலைத்திருப்போராயும் நீதிக்குச் சான்று வழங்குவோராயும் திகழுங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருநது பிறழச் செய்து விடக் கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள். இதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானது’ (5 : 8)
    ‘பூமியில் குழப்பம் ஏதுமற்ற நிலையில் அநியாயமாக ஒருவரை கொலை செய்பவர் (இறந்தவர் மீது கொலைப் பழி இல்லாத நிலையில்) மனித குலம் முழுவதையுமே கொன்றவர் போன்றவராவார்.’ (5:32)
    இறுதி ஹஜ்ஜின்போது முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இறைவனை நீங்கள் சந்திக்கும் இறுதித் தீர்ப்பு நாள் வரை) ஒருவர் மற்றவரின் உடைமையை, உயிரைப் பறிக்கக் கூடாது. முஸ்லிம் நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகள் குறித்து நபி (ஸல்) அவர்கள்,
    ‘ஒரு திம்மியை (முஸ்லிமல்லாத குடிமகனை) கொலை செய்பவன் சுவனத்தின் வாடையைக் கூட நுகர முடியாது’ எனக் கூறினார்கள்.
    தவறான தண்டனையிலிருந்து பாதுகாப்புப் பெற்றுத் தருகிறது இஸ்லாம்.
    வேறொருவர் செய்த குற்றத்திற்காக ஒருவர் தண்டிக்கப்படுவதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.
    இது குறித்து குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது:
    ‘ஒருவரின் சுமையை மற்றவர்கள் சுமக்க மாட்டார்கள்.’ (6 : 164)

    ReplyDelete
  2. நல்ல சிந்தனைகள் .இம் மாதிரியான கருத்துகள் நிறைய வரவேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.