Header Ads



மொஹமட் சியாம் கொலை - இன்று வழக்கின் தீர்ப்பு

பம்பலப்பிட்டி பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று (27) கொழும்பு விசேட மேல் நீதிமன்றினால் வழங்கப்பட உள்ளது.

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் ரவிந்து குணவர்தன மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் திகதி முதல் 2013ம் ஆண் மே மாதம் 23ம் திகதி வரையிலான காலப்பகுதியில் மொஹமட் பவுஸ்டீன் முதலீப். கம்மத தடயக்கார கொரலகே கிருஸாந்த விஸ்வராஜ் ஆகியோருடன் இணைந்து கொலை திட்டமிடமல் கொலை செய்தல் உள்ளிட்ட 10 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

வாஸ் குணவர்தன, இந்திக்க பமுனுசிங்க, காமினி சரத்சந்திர, ஆனந்த பத்திரனகே சஞ்சீவ, ரஞ்கன திஸாநாயக்க மற்றும் ரவிந்து குணவர்தன ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாவர்.

மேல் நீதிமன்ற நீதவான்களான லலித் ஜயசூரிய, குசலா சரோஜனினி வீரவர்தன மற்றும் அமேந்திர செனவிரட்ன ஆகியோர் இந்த வழக்கை விசாரணை செய்தனர்.

ஒரு வருட காலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட உள்ளது.

No comments

Powered by Blogger.