Header Ads



138 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், முதலாவது சர்வதேச பகலிரவு டெஸ்ட் போட்டி

உலக டெஸ்ட் வரலாற்றில் முதலாவது சர்வதேச பகலிரவு டெஸ்ட் போட்டி (27-11-2015) இடம்பெறவுள்ளது.

அவுஸ்திரேலியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்று வரும் மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியே இந்த வரலாற்று சிறப்பு மிக்க பகலிரவு போட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியானது பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளமை விசேட அம்சமாகும். 138 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், பகல் இரவு போட்டியாக நடத்தப்படும் முதல் டெஸ்ட் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

ரி20 போன்ற குறைந்த ஓவர் போட்டிகள் காரணமாக டெஸ்ட் போட்டிகளுக்கான வரவேற்பு ரசிகர்களிடத்தில் குறைந்து வருவதோடு, அதனை மைதான அரங்கிலும் காணக்கூடியதாக இருக்கின்ற நிலையிலேயே, சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளுக்கான பிரபல்யத்தை அதிகரிக்கவும், அதன் தரத்தை பேணுவதற்கும் முடியும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பறவுள்ள இப்போட்டியில், இதுவரை டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்பட்டு வந்த சிவப்பு நிற பந்திற்கு பதிலாக இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்படவுள்ளது.

138 வருட டெஸ்ட் வரலாற்றை மாற்றியமைக்கும் இப்போட்டி, கிரிக்கெட் உலகிற்கு பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 comment:

  1. Actually its waste of time. mostly youths wasting lots of their valuable time on this stupid game. If you really don't have anything to do then only should watch. Aspiring sportsperson may benefit from watching sports or people looking to improve themselves in a particular sport too.

    ReplyDelete

Powered by Blogger.