Header Ads



ஜேர்மன் அரசியலமைப்பு, அரேபிய மொழியில்

ஜேர்மனியில் குடியேறியுள்ள அரேபிய மொழி பேசும் அகதிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசியலமைப்பு சட்டங்களை அரேபிய மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரியா மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்துவர்கள் ஏராளமான எண்ணிக்கையில் ஜேர்மனியில் குடியேற வந்த வண்ணம் உள்ளனர்.

ஜேர்மனியில் குடியேறும் வெளிநாட்டினர்களை உள்நாட்டு குடிமக்களுடன் ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அந்நாட்டு அரசு ஒரு அதிரடி செயலில் இறங்கியுள்ளது.

ஜேர்மனி நாட்டின் கொள்கைகள் மற்றும் அடிப்படை சட்டத்திட்டங்களை புரிந்துக்கொள்ளும் வகையில், அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டங்களில் முக்கியமானதாக கருதப்படும் முதல் 20 கட்டுரைகளை அரேபிய மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.

இந்த 20 கட்டுரைகளில் ஜேர்மனி நாட்டின் பேச்சு உரிமை, மத உரிமை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அடங்கும்.

20 கட்டுரைகளை மொழிபெயர்ப்பு செய்தது மட்டுமின்றி, அவற்றை சுமார் 10 ஆயிரம் பிரதிகள் எடுத்து அகதிகள் தங்கியுள்ள முகாம்களில் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டின் துணை சான்சலரான சிக்மர் கேப்ரியல், ஜேர்மனிக்கு வருகை தரும் அகதிகளை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம்.

ஆனால், அவர்கள் ஜேர்மனியின் அரசியலமைப்பு சட்டங்களுக்குட்பட்டு செயல்பட வேண்டும்.

எந்த ஒரு அகதியையும் அவருடைய மத நம்பிக்கைகளை கைவிடவும், தனிப்பட்ட வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் நிர்பந்தம் செய்ய மாட்டோம்.

ஆனால், ஜேர்மனியின் ஜனநாயக சமூக கொள்கைகளை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள வேண்டியது மிக அவசியமானது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.