Header Ads



பேஸ்புக்கின் நிறுவனரின் குழந்தைக்கு, பெயர்வைக்க மறுத்த சீன ஜனாதிபதி

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கின் நிறுவனர், மார்க் ஜுக்கர்பர்க் தனக்கு பிறக்கப் போகும், பெண் குழந்தைக்கு சீனப் பெயர் ஒன்றைச் சூட்டுமாறு கேட்டதற்கு, சீனாவின் அதிபர் க்ஸி ஜின்பிங் மறுப்பு தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மார்க் ஜுக்கர்பர்க் காதல் திருமணம் புரிந்துகொண்ட ப்ரஸில்லா சான் சீனா-வியட்நாமின் அகதியாக அமெரிக்காவிற்குள் குடிபுகுந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். ப்ரஸில்லா தன்னுடன் படித்த காலம் முதலே மார்க்கும் அவரும் காதலித்து வந்தனர். மருத்துவ படிப்பு முடித்த ப்ரஸில்லாவை கடந்த 2013-ம் ஆண்டு மார்க் திருமணம் செய்துகொண்டார்.

மூன்று முறை ப்ரஸில்லாவுக்கு கர்ப்பம் கலைந்துவிட்ட நிலையில், தற்போது அவர் மீண்டும் கருத்தரித்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்தில் மனைவியுடன் மார்க் ஜுக்கர்பர்க் பங்கேற்றார்.

அப்போது, அதே விருந்தில் தனது மனைவியுடன் பங்கேற்ற சீன அதிபரிடம், சீன மொழியிலேயே பேசிய மார்க் ஒரு வேண்டுகோள் விடுத்தார். தனது மனைவியின் வயிற்றில் வளரும் பெண் குழந்தைக்கு சீன மொழியில் ஒரு நல்ல பெயரை தேர்வு செய்து தருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

எனினும், இதற்கு சீன அதிபர் ‘இது ஒரு மாபெரும் பொறுப்பு’ எனச்சொல்லி, பெயர் எதுவும் வைக்காமல் நழுவியதாக தெரியவந்துள்ளது. சீனா முழுவதும், வெய்போ என்ற சமூக வலைத்தளம் பேஸ்புக்குக்கு நிகராக பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வருவது, குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.