Header Ads



காலில் வலி என்று மருத்துவமனைக்கு போனவருக்கு, பாதி மூளை இருந்ததை கண்டு அதிர்ச்சி

பிரான்சில் 44 வயதான ஒரு நபர், தனது காலில் ஏற்பட்ட வலிக்காக மருத்துவமனைக்குப் போன போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு பாதி மூளைதான் இருந்ததை கண்டுபிடித்து அதிர்ச்சி அளித்தனர்.

ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கும் மூளையில் பாதி அளவு மட்டுமே அவருக்கு இருந்ததாகவும், அவர் எப்படி இயல்பாக ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார் என்று ஆச்சரியப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறினர்.

அவர் திருமணமாகி, நல்ல வேலையில் இருப்பதும், அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அவருக்கு ஒரே ஒரு பிரச்னை இருந்துள்ளது அது என்னவென்றால், மற்றவர்களை விட அறிவுத்திறன் குறைவு.

அவரது மருத்துவ வரலாற்றை பரிசோதித்த போது, அவருக்கு 6 வயது இருக்கும் போது, அவரது மூளையில் நீர் தேங்கியுள்ளது. அதனை மருத்துவர் சிகிச்சை அளித்து அகற்றியுள்ளார். அதன்பிறகு 14 வயதிலும் ஒரு முறை சிகிச்சை அளித்து மூளையில் இருந்து தண்ணீரை அகற்றியுள்ளார்.

அதன்பிறகு, அவரது மூளையில் சிறிது சிறிதாக நீர் சேர்ந்து தற்போது 44 வயதில் மூளையே சுருங்கிப் போயுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.