Header Ads



‘புரொபஷனல் வெயிட்டர்’ என்ற வேலையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா...?

‘புரொபஷனல் வெயிட்டர்’ என்ற வேலையைப் பற்றி இதுவரை கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? நாங்களும் இல்லை! அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இந்தப் பணியை செவ்வனே செய்யும், ஒரு ஆண்கள் அமைப்பு உள்ளது. இவர்களின் வேலை என்ன தெரியுமா?

புதிதாக அறிமுகமாகும், ஆப்பிளின் ஐபோன் போன்ற பொருட்களை வாங்குவதற்காக வரிசையில் காத்திருப்பது! இதுபோல, சில பிரபலமான நிகழ்ச்சிகளுக்கு நேரில் மட்டுமே டிக்கெட் தருவோம் என அடம்பிடிக்கும் இடங்களுக்கு சென்று வெற்றியுடன் அவற்றை வாங்கி வருவது போன்றவைதான்!

இந்த சேவைக்கென பிரத்யேகமாக, ‘சேம் ஒலே லைன் டியூட்ஸ்’ என்கிற பெயரில் தமது சேவைகளைப் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளனர். இவர்கள் வரிசையில் காத்திருக்க முதல் ஒரு மணி நேரத்துக்கு 25 அமெரிக்க டாலர்கள் (சுமார் ஆயிரத்து அறுநூறு ரூபாய்) வசூல் செய்கின்றனர். அடுத்து, காத்திருக்கும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் பத்து டாலர்களை (சுமார் அறுநூறு ரூபாய்) இவர்கள் வசூலிக்கின்றனர்.

இதுபோல காத்திருக்கும் அனைத்து இடங்களும் பாதுகாப்பானதாக இருப்பதில்லை. குளிரிலும், பனியிலும், மழையிலும், வெயிலிலும் இவர்கள் காத்திருக்க வேண்டிவருவதாக தெரிவித்தனர். சமீபத்தில் வெளியான ஐபோனை சுமார் 48 மணிநேரம் காத்திருந்து வாங்கியதற்காக, ஆயிரம் டாலர் வரை அந்த வாரம் மட்டும் வசூல் ஆனதாக இதில் பணிபுரியும் ஒருவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.