Header Ads



லிபியா கடற்கரையில், ஒதுங்கிய 85 உடல்கள்

மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்கு அடைக்கலம் புக செல்லும் குடியேறிகள் மரணமடைவது அதிகரித்துள்ள நிலையில், தற்போது லிபியா கடற்கரையில் 85 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பல உடல்கள் மிகவும் சிதைந்த நிலையில் கரை ஒதுங்கின. 

திரிபோலியில் 75 உடல்களும், சப்ரட்டாவில் 10 உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக, சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமான ரெட் கிரசென்ட் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றி வந்த ரப்பர் படகுகளில் இருந்து 212 பேர் மீட்கப்பட்டதாக லிபிய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. 

இந்த ஆண்டு மட்டும் மத்திய தரைக்கடல் பகுதியை 5 லட்சத்து 15 ஆயிரம் குடியேறிகள் கடந்ததாகவும், இறந்துபோன மற்றும் காணாமல் போனவர்கள் 3000 பேர் என்றும் ஐ.நா. அகதிகள் ஆணையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.