Header Ads



மகிந்த ராஜபக்ஸவிற்கு அஞ்சும் ஊடகங்கள்..!

ஊடகங்கள் இன்னமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு அஞ்சுவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வியொன்றுக்கு, தாம் கோரிய தலைப்பினை இடுமாறு தாம் கோரியதாகத் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்த முதலில் ஒப்புக்கொண்டவர் மஹிந்த ராஜபக்ஸவே செவ்வியில் தாம் குறிப்பிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும், குறித்த பத்திரிகை செவ்வியின் அந்தப் பகுதியை பிரசூரிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மஹிந்த ராஜபக்ஸவின் பெயரைச் சொன்னாலே சில ஊடகவியலாளர்கள் அஞ்சுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். மஹிந்தவிற்கு எதிராக அல்லது மஹிந்தவை விமர்சனம் செய்ய அவர்கள் விரும்புவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2009ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கை விஜயம் செய்த போது மஹிந்த ராஜபக்ஸ, உள்ளக விசாரணைப் பொறிமுறைமைக்கு இணங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. அது அச்சமில்லை விசுவாசம்

    ReplyDelete
  2. that means your government is very weak. people and media think mahinda might come back sooner or later.

    ReplyDelete
  3. kolai seywaan endra bayam than

    ReplyDelete
  4. பயமும் கிடையாது விசுவாசமும் கிடையாது : பழக்கதோஷம்!

    ReplyDelete

Powered by Blogger.