Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களை, விக்னேஸ்வரன் ஏமாற்றுகிறார் - குமுறுகிறார் சுபியான் மௌலவி

யாழ்ப்பாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், 30 ஆம் திகதி, 2 மணி நேர அவகாசத்தில், 200 ரூபாய்களுடன், சொப்பிங் பேக்குடன் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யபட்ட யாழ்ப்பாண முஸ்லிம்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பும், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் தொடர்ந்து ஏமாற்றி வருவதாக யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மௌலவி சுபியான் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது.

தமது பாரம்பரிய தாயகமான யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற முஸ்லிம்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் குடியேறுவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. புதிய வீடமைப்புத் திட்டங்களை யாழ் முஸ்லிம் பிரதேசங்களில் ஏற்படுத்துவதன் மூலம் மீள்குடியேற்றத்தை ஓரளவு சாத்தியப்படுத்தலாம்.

எனவே அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் வழிநடத்தலில் இலங்கையின் பிரதான முஸ்லிம் அரசியல் சக்திகள் ஒன்றுபட்டு யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை சாத்தியப்படுத்த தீர்மானிக்கபட்டுள்ளது. இதன்பொருட்டு விரைவில் ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட குழுவினரை  றிஸ்வி முப்தி தலைமையிலான தரப்பினர் சந்திக்கவுள்ளனர்.

மேலும் விக்னேஸ்வரன் முதலமைச்சராக நியமிக்கபட்டதன் பின்னர் யாழ் முஸ்லிம் சமூகம் அவருக்கு வரவேற்பு வழங்கியது. இதன்போது அவர் பல வாக்குறுதிகளை வழங்கினார். இந்த வருடத்தில் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி நான் விக்னேஸ்வரனை சந்தித்தேன். அதன்போதும் அவர் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு உதவுவதாகவும், மீள்குடியேறிய முஸ்லிம்களின் நலனை கவனிப்பதாகவும் உறுதியளித்தார்.

ஆனால் எதுவுமே நடைபெறவில்லை. இவற்றை ஞாபகப்படுத்தி நான் விக்னேஸ்வரனுக்கு 2 கடிதங்களைக்கூட அனுப்பிவைத்தேன். அவற்றுக்குக் கூட அவர் பதில் அளிக்கவில்லை.

வடமாகாண சபையில் அண்மையில் இனப்படுகொலை நடைபெற்றதாக திர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்போது வடமாகாண முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யபட்டவர்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றுமாறு வலியுறுத்தினேன். அதுவும் புறக்கணிக்கபட்டது. 

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமக்கு அதிகாரங்கள் இல்லையென கூறமுடியாது. அவரிடம் மாகாண முதலமைச்சருக்குரிய அதிகாரங்கள் உள்ளன. அவற்றைக்கொண்டு அவர் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு எவ்வளவோ செய்யலாம். முன்னாள் ஆளுநர் சந்திரசிரி செய்தவற்றைக்கூட இந்த விக்னேஸ்வரனால் யாழ் முஸ்லிம்களுக்கு செய்ய முடியாமலுள்ளது.

அவரால் முடியும். ஆனால் செய்கிறார் இல்லை. இந்தநிலையில் அவர் யாழ்ப்பாண முஸ்லிம்களை திட்டமிட்டவகையில் புறக்கணிக்கிறார் என்பது தெளிவாகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அவ்வாறே செயற்படுகிறது. யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்கிறது. இவை குறித்து பேச எவரும் இல்லை. மக்களின் பிரதிநிதியாகிய எனக்குள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி, யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு என்னால் முடிந்த பங்களிப்புகளை செய்துவருகிறேன் எனவும் இதன்போது மௌலவி சுபியான் சுட்டிக்காட்டினார்.

3 comments:

  1. முதலமைச்சருக்கு ஓரளவூ சிறந்த நோக்கம் உள்ளது அங்குள்ள அரச ஊழியர்கள் அதிலும் விவேடமாக சில பெண் அரச ஊழியர்கள் முழுக்கப் பேருவது இனவாதம் அல்ல அதிலும் மேலாக தீவிரவாதம்

    ReplyDelete
  2. Eppothum thuvesaththai sumanthaverhal

    ReplyDelete
  3. இதற்கெல்லாம் எதிராகப் போராட வேண்டிய நமது கோட்சூட் ஆசாமிகள் பாராளுமன்றத்தில் குறட்டை விடுகின்றார்களே.. அவர்களை சிறிது எழுப்பி விடக்கூடாதா..?

    இல்லயென்றால் மகிந்தகாலத்தில் பள்ளிவாசல் உடைப்புகளுக்காக குரல்கொடுத்த ஜேவீபியின் அனுரகுமார போன்ற மாற்று இனத்தவர்கள்தான் இப்போதும் முஸ்லீம்களுக்காகப் பேசவேண்டிவரும்.

    அப்போது, 'ஆ...வ்..! இங்க என்னதான் நடக்குது?' என்று கேட்டபடி கொட்டாவி விட்டுக்கொண்டே மலங்க மலங்க பார்க்க விழித்துப் வேண்டிவரும், நம்முடைய கோட் சூட் கோமாளிகள்!

    ReplyDelete

Powered by Blogger.