Header Ads



105 வயது முதியவரின், ஹஜ் அனுபவம்...

'ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டேயிருக்கும். இடையில் குடும்ப சூழலும் கஷ்டத்தைக் கொடுத்த போது உடைந்தே போய் விட்டேன். 100 வயதை எட்டியவுடன் திட்டமிட்டு பொருளாதாரத்தை சேகரிக்க தொடங்கினேன். நாளுக்கு நாள் ஹஜ்ஜூக்கான செலவுகள் கூடிக் கொண்டே போனது மேலும் எனக்கு சிக்கலை கொடுத்தது. 

எனது வாழ்நாள் கனவான ஹஜ்ஜூப் பயணத்தை இன்று இறைவன் நனவாக்கி வைத்துள்ளான். பல ஆண்டுகள் செய்த எனது பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொண்டுள்ளான். ஹஜ் பயணம் இந்த வயதில் மிகவும் சிரமம் என்று நினைத்திருந்தேன். ஆனால் எல்லா வசதிகளையும் இந்த அரசு செய்து கொடுத்து எங்களைப் போன்றவர்களின் பயணத்தை மிக இலகுவாக்கியுள்ளது. எல்லா புகழும் இறைவனுக்கே!' என்று பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்தார் 105 வயதை தொட்டிருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த நூர் முஹம்மது.

அவர் பேட்டியளிக்கும் போது கண்களிலிருந்து கண்ணீர் வந்து கொண்டேயிருந்தது. இது பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு 'இது எனது ஆனந்த கண்ணீர்' என்று பதிலளித்தார்.

இவரைப் போன்று பல்லாயிரக்கணக்கான வயோதிகர்களின் கனவை இறைவன் நனவாக்கி வைப்பானாக!

தகவல் உதவி
சவுதி கெஜட்
26-09-2015

1 comment:

Powered by Blogger.