Header Ads



ரணிலின் வழிமுறையை, UPFA தலைவர்கள் கடைப்பிடிப்பார்களா..?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்புரிமை பெற்றவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கக் கூடாது என்று கீதா குமாரசிங்க வலியுறுத்தியுள்ளார்.

சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள கீதா குமாரசிங்க,

தமது தொகுதிகளை கோட்டைவிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படமாட்டாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

அதே வழிமுறையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் கடைப்பிடிக்க முன்வருவார்களா?

தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு நியமனம் பெற்றவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படக்கூடாது என்று பொதுமக்கள் மத்தியில் ஒரு கருத்து வலுப்பெற்றுள்ளது.

அதனைக்கருத்திற்கொண்டு தேசிய அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகள் வழங்கும் விடயத்தில் சுதந்திரக் கட்சித் தலைவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று கீதா குமாரசிங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இரட்டைக் குடியுரிமை விவகாரம் தொடர்பில் கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகவுள்ளதாக நேற்றைய தினம் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.