Header Ads



பேஸ்புக் செயற்பாட்டாளர்களுக்கு, தேர்தல் பணிகளில் ஈடுபட வாய்ப்பு - மகிந்த தேசப்பிரிய

பேஸ்புக் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களில் பொதுமக்களுக்கு அறிவூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள செயற்பாட்டாளர்களுக்கு தேர்தல் பணிகளில் ஈடுபட வாய்ப்பளிக்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறை மற்றும் விருப்பு வாக்குகள் எண்ணப்படுதல் தொடர்பில் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் மற்றும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோருக்கிடையில் இன்று நீண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இதனை கொழும்பு நியூஸ் டுடே செய்திச் சேவை ஏற்பாடு செய்திருந்ததுடன், தேவையான நெறிப்படுத்தல்களையும் செய்திருந்தது. ஏராளமான சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, இனிவரும் தேர்தல்களின் போது தற்போதுள்ள வாக்குச் சாவடி முகவர்களுக்கு மேலதிகமான சமூக வலைத்தள பதிவாளர் ஒருவரும் தேர்தல் அவதானிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்.

அத்துடன் முக்கியமான விடயங்களை தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கும் பொருட்டு, வாக்குச் சாவடி தோறும் மொபைல் போன் முகவர் அல்லது எஸ்.எம்.எஸ் முகவர் ஒருவரையும் நியமிப்பது குறித்து தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தியுள்ளது.

தேர்தல்கள் தொடர்பில் பொதுமக்களின் உச்சபட்ச கவனத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. சேர் கள்ள வோட்டு போடக்கூடாது என்றுதானே நீங்கள் இவ்வலவு கஷ்டப்பட்டு இவ்வாறான முடிவுகளை எடுக்கிறீர்கள்.பிரயோசனம் இல்லை சேர் தோற்றவன்தான் இலகுவாக வெற்றி பெற்றவனுக்கு முன் பார்லிமென்ட்டுக்கு போவிடுகிறான்.

    ReplyDelete

Powered by Blogger.