Header Ads



கோழிகளை ஏற்றிச் செல்ல பயன்படும், கன்டைனரில் 71 சடலங்கள்

71 பேரின் உடல்களுடன் உரிமையாளர் எவருமற்ற நிலையில் ஹங்கேரி நாட்டின் எல்லையில் காணப்பட்ட கன்டைனரிலிருந்து 71 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் 59 ஆண்கள், 08 பெண்கள் மற்றும் 04 சிறுவர்கள் உள்ளடங்குகின்றதாக தெரிவித்துள்ள பொலிஸார், இவ்வுடல்கள் சுமார் இரண்டு நாட்களான நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த அகதிகள் சிரியாவிலிருந்து வந்திருக்கலாம் என தெரிவித்துள்ள பொலிஸார் கோழிகளை குளிரூட்டி ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் குறித்த கன்டைனர் ஹங்கேரி நாட்டின் எல்லையில் உள்ள நெடுஞ்சாலையில் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த லொறியிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து பொலிஸார் லொறியை சோதனை செய்துள்ளனர்.

மூச்சுத் திணறல் மற்றும் நெருக்கம் காரணமாக இவர்கள் இறந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் குறித்த கன்டைனரின் உரிமையாளர்கள் எனும் சந்தேகத்தில்  பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என கருதப்படும் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.