Header Ads



இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த, சந்திரிக்காவுக்கு முக்கிய பொறுப்பு

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் புதிய அரசாங்கத்தினால் நிறுவப்பட உள்ள மிக முக்கியமான ஓர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சிகளில் சந்திரிக்கா முக்கிய பங்கு வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில் புதிய அரசாங்கத்தின் மிக முக்கியமான பொறுப்பு ஒன்று சந்திரிக்காவிடம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் தொடர்பில் புதிய நிறுவனமொன்றை அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் கோரிக்கையையும் கருத்திற் கொண்டு இந்த நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில், இந்த நிறுவன உருவாக்கம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் கட்nடியழுப்பும் நோக்கில் இந்த நிறுவனம் செயற்படும் எனவும் அதனை வழிநடத்தும் பொறுப்ப சந்திரிக்காவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.