Header Ads



''ஜே.ஆர்.ஜயவர்தனவை விட, மைத்திரிபால சிறிசேன மோசமானவர்''

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கமொன்றை அமைக்க இன்னமும் காலம் கடந்துவிடவில்லை என மஹஜன எக்சத் பெரமுன கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவைவிடவும் மோசமான முறையில் மைத்திரிபால சிறிசேன நடந்து கொண்டார்.

தேர்தலின் இறுதிக் காலப்பகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர்கள் நீக்கப்பட்டனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியை அமைக்க இருந்த நேரத்தில் அதன் தலைவர் ஜனாதிபதி செய்த விடயங்களினால் வெற்றி வாய்ப்பு கைநழுவிப் போனது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தவறான முறையில் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

சுசில் பிரேமஜயந்த மனச்சாட்சிக்கு இணங்க செயற்படவில்லை, அவ்வாறு செயற்பட்டிருந்தால் இதற்கு முன்னதாகவே பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டுமென தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.