Header Ads



சட்டவிரோத நிர்மாணங்களை பொலிஸாரின் ஒத்துழைப்புடன், நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரி உத்தரவு

கரையோரப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் விசேட திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு இன்று தீடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

மாளிகாவத்தையில் உள்ள கரையோர பாதுகாப்புத் திணைக்களத்திற்கு இன்று மதியம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அதன்போது ஜனாதிபதி திணைக்களத்தின் ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

கரையோர பாராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக திணைக்களம் இதுவரை மேற்கொண்டுள்ள திட்டங்கள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதி ஆராய்ந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

அந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளையும் ஜனாதிபதி ஆராய்ந்துள்ளார்.

மணல் ஊட்டச்சத்துத் திட்டம் தொடர்பில் இதன்போது ஜனாதிபதி அதிகக் கவனம் செலுத்தியுள்ளதுடன், அதன் முக்கியத்துவம் தொடர்பில் ஊழியர்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்.

எனவே, சட்டவிரோத நிர்மாணங்களை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் நீக்குமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


No comments

Powered by Blogger.