Header Ads



தேசிய அரசாங்கத்தின் மூலம், முஸ்லிம்களின் பேரம்பேசும் சக்தி மூழ்கடிக்கப்படுமா..?

-சட்டத்தரணி பஸ்லின் வாஹிட் -

கடந்த ஜனவரி   மாதம் 8ம் திகதி இந்நாட்டு மக்கள் ஓர்  புரட்சிகரமான அரசியல் மாற்றத்துக்கு வாக்களித்தது முழு உலகையும் வியப்பில் ஆழ்த்தும் படியாகும்.

இலகுவாக யாராலும் தோற்கடிக்க   முடியாது என நினைத்த மகிந்த ராஜபக்ஷவை  அவரின் கட்சியிலிருந்த ஒருவரைக்கொண்டே தோல்வியடையச் செய்தது மக்களின் வாக்குப்பலம் எல்லா அதிகாரங்களையும் பின் தள்ளச் செய்யும் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்த சந்தர்ப்பமாகும்.மகிந்த இலங்கையில் புற்றுநோய் போல் பரவிக்கிடந்த உலகின் மிகப்பலம் வாய்ந்த தீவரவாதக் குழுவான புலிகளை தோல்வியடையச் செய்தவர். 

சிங்கலப் பெரும்பான்மை மக்கள் தங்களுக்கு விடூதலை பெற்றுத் தந்த மகாராஜா என போற்றிப் புகழ்ந்த ஒரு தலைவர்.அவருக்கு வாழ் நாள் முழுதும் அனைவரும் நன்றிக் கடன் பட்டு உள்ளதாக நாட்டுமக்களில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டும் இருந்தனர் .இன்னும் உள்ளனர்.ஆனால் அவரின் ஆட்சியில் அவருக்கு உறுதுணையாக இருந்த சகோதரர்களினதும், அவருக்கு நெருக்கமான அமைச்சர்களினதும் ,அடிவருடிகளினதும் ஊழல்களும் மோசடிகளும் மகிந்தவின் ஆட்சியை கவிழச்  செய்தது.

மகிந்தவின் ஆட்சியில் நாட்டில் என்றும் காணாத அபிவிருத்தித் திட்டங்களைக்  காணக்கிடைத்தது.தீவிரவாதமும் முற்றாக ஒழித்துக் கட்டப்பட்டது என்றே கூறலாம் ஆனால் 2010 தேர்தலில் அதற்கு பிரதி உபகாரமாக மகிந்தவை வெற்றி பெறச் செய்த மக்கள் 2015 ஜனாதிபதி  தேர்தலில் தோல்வியடையச் செய்தனர். எல்லாவற்றையும் வெற்றிகரமாகச் செய்து  முடித்த மகிந்த .மக்கள் மனதை வெல்ல  தவறி விட்டார் என்று அண்மையில் ஒரு விழாவில் தம்மர அமில தேரர் குறிப்பிட்டது ஞாபகத்துக்கு வருகின்றது.

மகிந்தவை மக்கள் தோல்வியடையச் செய்தது வெறுமனே ஒரு ஆட்சிமாற்றத்துக்கு அல்ல. நல்லாட்சி ஒன்றை அமைக்கப்போகின்றோம். ஊழல், மோசடிகளிலீடுபட்டவ்ர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்குவோம். நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்வோம்.

நாட்டு  மக்கள் அனைவரும்  சிறப்பாகவும் ஒற்றுமையாகவும் வாழ வழி சமைப்போம், இன்னும் எத்தனையோ பொருத்தங்கள். அத்தனையையும் UNP தலைமையிலான ஆட்சியின் மூலமே  கொண்டு வர முடியும். எனவே ஆட்சி மாற்றமொன்றுக்கு வாக்களிக்குமாறு கோரினர். அத்தனையையும் நம்பித்தான் UNP தலைமையிலான ஆட்சிக்கு இரண்டு தேர்தல்களிலுமே மக்கள் வாக்களித்தனர். மைத்திரியிக்கும் ரணிலுக்கும் ஆதரவாக மக்கள் வாக்களித்தது அவர்களின் கொள்கைகளை விடவும் எதிரியை/எதிரிகளை  விரட்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே. 

நடந்தது என்ன நடப்பது என்ன.யார் யாரை  ஊழல் பேர்வழிகள் என்று கூறினாரோ அவர்களும் ஆட்சியின் பங்காளர்கலாகப் போகின்றனர்.யார் யாருக்கு தண்டனை வழங்கப்போகின்றோம் என்று கூறினரோ அவர்கள் எல்லாம் அமைச்சர்களாகப் போகின்றனர்.மக்கள் அபிலாஷைகளும் எதிர்ப்பார்ப்புகளும் தவிடு பொடியாகி தேசிய அரசாங்கமென்ற போர்வையில் மீண்டும் வரப்போவது பெயர் மாற்றம் மட்டுமே.என்பது தான் மக்கள் மனதில் இன்று  உள்ள ஆதங்கமாகும்.

.முன்னர் மகிந்தவின் கையில் மட்டும் இருத்த அதிகாரம் பரவலாக்கப் பட்டு பாதி   மட்டும் UNP இனருக்கு கிடைக்கப் போகின்றது.மீதி மீண்டும் மகிந்தவின் அடிவருடிகளுக்கே போகப் போகின்றது.

அது ஒருபுறமிருக்கட்டும். சிறுபான்மை மக்களில் 90% அதிகமானவர்களின் வாக்குகளின் மூலமே மைத்திரியினதும் ரணிலினதும் வெற்றி உறுதி செய்யப்பட்டது..அதிலும் குறிப்பாக முஸ்லிம் மக்கள் இரண்டு தேர்தல்களிலும UNP தலைமையிலான கட்சிக்கே 95% வாக்குகளை அளித்தனர்  என்றால் மிகையாகாது.ஆனால் இந்த ஆதரவு எமது சமூகத்திற்கு எந்த அளவு பயன் தரப்போகின்றது என்பதைப் பொறுத்து இருந்து தான்  பார்க்க வேண்டும். தேசிய அரசாங்கம்  என்ற அமைப்பு முஸ்லிம் கட்சிகளினதும் ஏனைய சிறு கட்சிகளினதும் பேரம் பேசும் சக்தியை குறைத்து உள்ளது.முஸ்லிம் கட்சிகளுக்கும் ,பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்  வழங்கப்படப் போகும் அமைச்சுப் பொறுப்புக்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் கொடுக்கப் பட்டு இருந்த அளவுக்கு அதிகாரம் வாய்ந்ததாக இருக்குமா என்பது கேள்விக்குறியே. 

இது போன்ற செயல்கள்தான் மைத்திரியின் அரசியல் வியூகங்கள் ஜே.ஆரையும் விஞ்சியது என முன்னைய கட்டுரையில் குறிப்பிட்டேன். தேசிய அரசாங்கமும் சிறுபான்மையினரின் பேரம் பேசும் சக்தியை குறைக்கும் ஒரு அரசியல் வியூகமாகவும் இருக்கலாம்.

வெற்றிகளின் பின்னால் பிரதான பங்கு வகித்த   முஸ்லிம் மக்களுக்கு அவர்களின் பங்களிப்புக்கு ஏற்ற அமைச்சு பொறுப்புக்கள் வழங்கப்படுதல் வேண்டும். அதனைப் போராடியேனும் பெற்றுக்கொள்ளும் சக்தியையும் தைரியத்தையும் எமது தலைவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹுத்ஆலா வழங்க வீண்டும். அதைக்கொடுக்கும் மன நிலையை ஆட்சியாளர்களுக்கு அவன் வழங்க வேண்டும் என்றும்பிரார்த்திப்போமாக. 

5 comments:

  1. பஸ்லின் வாஹிட் அவர்களே, முதலில் பேரம் பேசும் சக்தி மூலம் எதை பேச விரும்புகிறோம் ( எவை முஸ்லிம்களின் தேவை) என்பதை கூரி விட்டு இந்த கட்டுரையை நகர்த்தி இருந்தால் நன்றாக இருக்கும். அதே நேரம் ஹகீமா அல்லது ரிசாத்தா பேரம் பேச வேண்டும் என்பதையும் கூரியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

    சுயநலம், பிரதேச வாதம், ஊருக்கு ஒரு எம்பி, தொகுதிக்கு ஒரு மந்திரி, பட்டம், பதவி, பணம், பொறாமை, தேசிய தலைவர், என தலைவிரித்தாடும் இந்த முஸ்லிம் சமூகத்தில் நீங்கள் பேரம் பேசும் சக்தியை பற்றி கவலை படுவதும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதும் எங்களுக்கு என்றால் கவலையாக உள்ளது.

    ஒரு கற்பனைக்கு, தமிழர்களுடன் இந்த தேசிய அரசாங்கம் தீர்வு சம்பந்தமாக முஸ்லிம்களை புறக்கணித்து பேசுகிறது என்று வைத்துக் கொள்வோம். ஹக்கீமும், ரிசாத்தும் தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறுகிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம் ( அவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள் என்பது வேறு விடயம் ) எத்தனை எம்பி மார் இவர்களுடன் வருவார்கள் என்று சற்று சிந்தித்து பாருங்கள். ஹக்கீமும், ரிசாத்தும் அவர்களது கடந்த கால அரசியல் பயணம் மிகவும் வெட்கப்பட வேடியதும், முஸ்லிம்களை மலினப்படுத்துவதுமாகவே இருந்தது என்பது எங்களது கணிப்பாகும். இருவரும் அவர்களது தனிப்பட்ட விடயங்களுக்கே பேரம் பேசுவார்கள், மாறாக முஸ்லிம் சமூகத்துகாக அல்ல என்பது எமது கணிப்பாகும்.

    தமிழ் அரசியல் தலைவர்கள் என்ன பேரமா பேசுகிறார்கள்? அவர்கள் பேசுவதை எப்படி அழைக்கலாம்?

    நமது உரிமை என்பது பிறர் தருவது அல்ல. நாமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். உரிமை பறிக்கப்படுமானால் அதை போராடி பெற்றுக் கொள்ள வேண்டும்.

    ஹக்கீமுக்கும் ரிசாத்துக்கும் கிடைக்க போகும் சலுகைகள் தான் முஸ்லிம்களின் பேரம் பேசும் சக்தியாகும்.

    ReplyDelete
  2. during the last presidential election muslims already decided to vote for hon. maithripala sirisena and never cared to whom our politicians will support. most of our politicians supported mahinda and switched sides after realizing hon. maithripala sirisena will be the winner. our only target was to beat mahinda and we did it alhamdu lillah. muslims will decide their future but not muslim politicians. who cares about aluthgama now ? any words from our so called leaders other than fighting for national list ?

    ReplyDelete
  3. இருவரும் அற்புதமாகச் சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். இப்போதாவது நம்மவர்களில் சிலராவது யதார்த்தத்தை புரிந்து கொண்டுள்ளார்கள் என்பது மகிழ்ச்சி.
    இலங்கையில் இஸ்லாமிய அரசியல் 100% சுயநலம்

    ReplyDelete
  4. Muslim power broked by munfiks years ago money is the main aim Allah will give them fire

    ReplyDelete
  5. என்னதான் பேரம் பேசும் சக்திகளாக மாறினாலும் நாங்கள் முஸ்லிம் மக்களனின் பிரதிநிதிகள் என்று சொல்பவா்கள் தங்களது பொக்கட்டையும் சுயநலத்தையும் பார்த்தாக்களே ஒழிய சமூகத்திற்கான காத்திரமான எந்த முன்னெடுப்புக்களளையும் செய்யவில்லை என்பதுதான் உண்மை

    ReplyDelete

Powered by Blogger.