Header Ads



மகிந்த ராஜபக்ஸ என்ற, அரசியல் மிருகம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஒரு அரசியல் மிருகம் என்று வர்ணித்துள்ள பேராசிரியர் ஜயதேவ உயங்கொட, அதிகாரம் இன்றி அவரால் இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை பேராசிரியரான ஜயதேவ உயங்கொட பைனான்சியல் டைம்ஸ் இதழில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள பேராசிரியர் உயங்கொட, கடந்த கால அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து அண்மைக்காலமாக தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. விசாரணைகளின் போது வெளிவரும் தகவல்கள் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிரானதாகவே இருக்கும். இவ்வாறான விசாரணைகள் மஹிந்த ராஜபக்ஷவை ஒரு அரசியல் போட்டிக்குள் தள்ளியுள்ளது.

எனவே தன்னையும் தனது குடும்பத்தினரையும் அவ்வாறான குற்றச்சாட்டுகளிலிருந்து தப்புவித்துக் கொள்ளும் நோக்கில் மஹிந்த தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடவே செய்வார்.

அதன் மூலமாக தனது குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை வலுவிழக்கச் செய்வது ராஜபக்ஷவின் நோக்கமாக இருக்கும்.

அதுமட்டுமன்றி மஹிந்த ராஜபக்ஷ ஒரு அரசியல் மிருகம். அவரால் அதிகாரம் இல்லாமல் இருக்க முடியாது என்றும் பேராசிரியர் ஜயதேவ உயங்கொட தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Currently Mahinda is trying to fool Ranil and get out of the situation.

    ReplyDelete
  2. just punishment for the crimes of mahinda family is the first step towards yahapalanaya and not reducing prices of food and fuel. people will be 1000 times better intelligent and better informed after five years and unp must remember that.

    ReplyDelete

Powered by Blogger.