Header Ads



ரவூப் ஹக்கீமுக்கு, இந்தியா முஸ்லிம் லீக் வாழ்த்து

-Shahul Hameed-

இ. யூ. முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், மாநில தலைவர் பேராசிரியர்கே.எம். காதர் மொகிதீன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நாடாளு மன்ற தேர்தல் முடிவுகள் குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின்  அண்டை நாடான ஸ்ரீலங்காவில் ஜனநாயகம் வேரூன்றி உள்ளது என்பதை நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. 

ஸ்ரீலங்கா மக்களை இனவாதம், மதவாதம், மொழிவாதம் என்னும் படுகுழிக்குள்  தள்ளி, மனிதாபிமானத்தை மண்மூடி போகச் செய்ய எத்தனித்த முயற்சிகள் யாவும் முறிய டிக்கப்பட்டுள்ளன.  ஸ்ரீலங்கா மக்களின் ஜன நாயக பண்பையும், அரசியல் தெளிவையும் உலகம் பாராட்டுகிறது. 

இலங்கைக்கு பெருமை சேர்ப்பது அங் குள்ள மதவழிப்பட்ட சிறு பான்மை முஸ்லிம்களையும், மொழிவழிப் பட்ட தமிழ் மக்களையும் அரவ ணைத்துச் செல்லும் அன்பு வழி - அறவழி - அமைதி வழி அரசியலே ஆகும்.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி சிறிசேனா அவர்களின் பொது நோக்கும், பரந்த மனப்பான்மையும், தமிழ் மக்களையும் - முஸ்லிம்களையும் ஒன்றி ணைத்துச் செல்லும் என்ப தில் ஐயமில்லை.நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அபூர்வ மனிதர் ரவூப்  ஹக்கீம் அவர்களின் தலைமையில்  மிகச் சிறந்த வெற்றியை ஈட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமையை நிலை நிறுத்தியிருக்கிறது.

வாக்கெடுப்பில் ஐந்து உறுப்பினர்களையும், விகி தாச்சார முறையில் இரண்டு உறுப்பினர்களையும் பெற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தேசத்தில் நான்காவது பெரிய அரசியல் கட்சியாக பரிணமித்திருக்கிறது.ஸ்ரீலங்கா மதவழிப் பட்ட முஸ்லிம் சிறுபான்மையினர், ஜனநாயக அரசியல் பண்பாடுகளை தெளிவாக உணர்ந்து - ஒன்றுபட்டு நின்று தேர்தலை சந்தித்திக் கிறார்கள். இந்த ஒற்றுமை உணர்வும், அரசியல் தெளிவும் இனி வருங்காலத் திலும் தொடர்ந்திட வாழ்த்துகிறோம்.

அறிஞர் ரவூப் ஹக்கீம் தேர்ந்த அரசியல் தலைவர்; நிதானமே பிரதானம் என்றிருப்பவர்; ஆழ்ந்த ஞானமும், ஜனநாயகப் பண்பும் மிகுந்தவர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை அரசியலில் ஒளியேற்றும் சக்தியாக திகழும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.வெற்றிக்கு வித்திட்ட ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும், அவரின் அன்பு சகாக்களுக்கும் ஆதரவு அளித்துள்ள வாக் காளர்களுக்கும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவிப்போம்.

பிரதமராக மீண்டும் பொறுப்பேற்கும் ரணில் விக்கிரமசிங்கே அவர் களுக்கும், பெரும் வெற்றி பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரி விப்பதில் மகிழ்ச்சியடை கிறது. இவ்வாறு தலைவர் பேராசிரியர் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள் ளார்.இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.