Header Ads



சாந்தி சச்சிதானந்தம் காலமானார்

அரசியல் விமர்சகரும், சமூகவியல் ஆய்வாளரும், பெண்ணியல் வாதியுமான சாந்தி சச்சிதானந்தம் கொழும்பு தனியார் வைத்தியசாலையில்  (27) இன்று  காலமானார்.

நீண்டகாலமாக சுகயீனமடைந்திருந்த நிலையிலும், சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டியதுடன் சமகால அரசியல் நிலைமைகளையும் நாளேடுகளில் விமர்சித்து வந்தார்.

விழுது மேம்பாட்டு மையத்தின் ஸ்தாபகரும், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பதவிவகித்த அவர், ஐக்கிய நாடுகள் சபையிலும் ஆரம்பகாலங்களில் பணியாற்றியிருந்தார்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சாந்தி சச்சிதானந்தம், மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியாக விளங்கிய போதிலும், அந்தத் துறையில் ஈடுபடாது, சமூகப் பணிகளிலேயே கூடுதலாக ஈடுபட்டுவந்தார்.

ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும், பாண்டித்தியம் பெற்ற அவர், இரண்டு மொழிகளிலும் ஆக்கங்களை எழுதியிருந்தார்.

இவரது ஆக்கங்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திலும் வெளியாகியருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜப்னா முஸ்லிம் இணையம் நடாத்திய அகில இலங்கை ரீதியிலான கவிதை போட்டியொன்றுக்கு ஏற்பாட்டாளராக செயற்பட்டதுடன், அதன் பரிசளிப்பு விழாவிலும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. உண்மையில் இவர் ஒரு சமூக ஆர்வலர் என்பதை மறுக்க முடியாது.
    இவருக்கு jaffnamuslim வாசகர்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.இவரை இழந்து தவிக்கும் இவரின் குடும்பத்தார்கள் அனைவருக்கும் நம் ஆறுதல் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

    ReplyDelete

Powered by Blogger.