Header Ads



செல்வாக்குள்ள கிரிக்கெட் வீரர் அர்ஜுனாவா..? சங்காவா..?? - சர்ச்சையை கிளப்பும் முரளி

இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் தனது அதித திறமையை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக உள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளி தரன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி, இலங்கைக்கு வருகை தந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில், 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 1-1 என்ற கணக்கில் போட்டி சமநிலையில் உள்ளது.

நடைப்பெற்று முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளையும் சேர்த்து, அஸ்வின் 17 விக்கெட்டுகளை கைப்பற்றியள்ளார்.

கொழும்பில் நடைப்பெற்ற் 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இந்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சை முன்னாள் சுழற்பந்து வீரர் முரளீதரன் இது தொடர்பாக அவர் கூறிறுகையில், இலங்கை ஆடுகளத்தில் அஸ்வினின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருக்கிறது. அவரது பந்து அதிகமாக பவுன்ஸ் ஆகிறது. அதில் விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார். சங்ககராவை அவர் ஆட்டமிழக்க செய்தபோது சிறப்பாக இருந்தது.

அஸ்வினுக்கு தற்போது 28 வயதாகிறது. அவரால் இன்னும் 10 ஆண்டுகள் விளையாட முடியும். 100 டெஸ்டுகள் வரை விளையாடினால் அஸ்வின் 600 முதல் 700 விக்கெட்டுகளை கைப்பற்றுவார்.

இலங்கை அணியின் செல்வாக்குள்ள கிரிக்கெட் வீரர் சங்ககரா என்று கூற இயலாது. அர்ஜூன ரனதுங்கா தான் இலங்கையின் செல்வாக்கு மிக்க வீரர் ஆவார். என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.